உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை..

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள் டில்லி செல்ல தடை விதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறைப்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fevebg5i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான பரிந்துரைகளை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில், காவிரி பாசன பகுதிகளின் நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இரண்டு அமைப்புகளுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்க, ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதிநிதிகள் உள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை மாதம்தோறும் நடத்த வேண்டும். அதன்படி, கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்பதற்காக தமிழக அதிகாரிகள், விமானத்தில் டில்லி செல்வது வழக்கம். ஆனால், இனி டில்லி செல்லாமல், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்க வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிந்துரைப்படி, அரசின் செலவை குறைப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காவிரி மேலாண்மை ஆணையத்தை விட, காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தான் காரசார விவாதம் நடத்தப்படுகிறது. நீர்வளத்துறை செயலர்கள் பெரிதாக விவாதிப்பது கிடையாது. எனவே, கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றால் தான் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், இன்று முதல் நடக்கவுள்ள அனைத்து கூட்டத்திலும், ஆன்லைன் வாயிலாக பங்கேற்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழக பிரதிநிதிகளுக்கு தெரியாமலே, மேகதாது அணை கட்டுமான பிரச்னையை, மத்திய நீர்வளத்துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்ற நிலையில், அவர் ஏமாற்றப்பட்டதாக, அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது, கவனமுடன் இருக்க வேண்டிய பிரச்னையில், ஆன்லைன் வாயிலாக பங்கேற்க சொல்வது பொருத்தமாக இல்லை. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
மே 16, 2024 15:00

ஆனா பீச்சில் ஊழலின் தந்தைக்கு சமாதி கட்டி தயிர் வடை படையல் வைக்க நிதிப் பற்றாக்குறையில்லை. கட்சி மாநாட்டில் பத்து லட்சம் பேருக்கு பிரியாணி விருந்துக்கு குறைச்சலில்லை.


N Srinivasan
மே 16, 2024 12:25

நமது நோக்கமே காவேரியில் தண்ணீர் வேண்டாம் நமக்கு தேவை மணல் அதை எடுப்பதற்கு என்ன என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும்


inamar
மே 16, 2024 10:39

அண்ணன் மணல் எடுத்து கல்லா கட்ட முடிவு பண்ணிட்டார்


Indhuindian
மே 16, 2024 10:19

முன்னே ஒரு மந்திரி ஜீ ஸ் டீ கூட்டத்துல கலந்துக்க தம்மாதூண்டு ஏரோபிளானெ குடுத்தாங்கன்னு அவங்க வூட்டுல நடக்கற விசேஷத்துக்கு போய்ட்டாரு அப்பல்லாம் இந்த சிக்கனம் எங்கே போச்சு எங்கேயோ இடிக்குதே


Gokul Krishnan
மே 16, 2024 10:15

மேயர் பிரியா குப்பை அள்ளுவதை பார்க்க வெளிநாடு போன போது இங்கே போனது உங்க சிக்கன நடவடிக்கை


UTHAMAN
மே 16, 2024 09:48

கபினி அணை கட்ட இவரோட அப்பா விட்டுக்கொடுத்தார் இப்ப இவர் இவங்க கல்லா ரொம்பினா போதும் பழியை மத்திய அரசு மீது போட்டுடலாம் எவனாவது கூவினா இருக்கவே இருக்கு ஏவல்துறை


Jaganathan G
மே 16, 2024 09:11

அரசின் செலவை குறைக்கவா ??


தத்வமசி
மே 16, 2024 08:41

யப்பா, யப்பா அரசின் சிலவை குறைக்கிரார்களாம் நல்ல சிக்கனம் வருடாவருடம் கூவம் ஆத்தில் நாலாயிரம் கோடி கொட்டுகிறார்கள் இதில் சிக்கனமாம்


duruvasar
மே 16, 2024 08:34

கபிணி அணை கட்ட அப்பா சம்மதம், மேகதாதுவுக்கு அன்பு மகனின் சம்மதம் மேட்டர் இஸ் வெரி சிம்பிள்


VENKATASUBRAMANIAN
மே 16, 2024 08:33

திருட்டு திமுக இப்படித்தான் முதலில் அமைச்சர்கள் வெளியூர் செல்வதை நிறுத்தட்டும் செலவு குறையும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை