உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 5, 1936இலங்கையின் கிழக்கு பகுதியான பெரிய போரதீவில், பூபாலப்பிள்ளை - ராசம்மா தம்பதியின் மகனாக 1936ல் இதே நாளில் பிறந்தவர் பூ.ம.செல்லதுரை. இவர், மட்டக்களப்பு அரசடி பாடசாலை, பழுகாமம் மகா வித்யாலயம் உள்ளிட்டவற்றில் படித்தார். இலங்கை தமிழர்களிடம் இருந்த வாழ்விற்கு ஒவ்வாத பழமைவாதங்களை விடுவிக்கும் வகையில் போரதீவு பகுத்தறிவு இயக்கத்தை துவக்கி, பின் இலங்கை தமிழரசு கட்சி என்ற அரசியல் இயக்கமாக மாற்றினார்.இவர், 'சுதந்திரன், தாயகம்' பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றினார். மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவராக இருந்த இவர், கவிதை, வரலாற்று ஆய்வுக் கட்டுரை, சிறுகதை, நாடகங்களை எழுதி தமிழர்களிடம் ஒற்றுமையை வளர்த்தார். 'தமிழனே கேள், இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வென்ன? சிங்களவர் பூர்வீகம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். 'சமூக சோதி, கலா வேந்தன், கலாபூசணம்' உள்ளிட்ட பட்டங்களை பெற்ற இவர், தன் 80வது வயதில், 2016, பிப்ரவரி 11ல் மறைந்தார். 'வண்ணன், மயன், நளன், கண்ணா' எனும் புனை பெயர்களிலும் எழுதிய ஈழ எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ