மேலும் செய்திகள்
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
6 hour(s) ago | 1
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
7 hour(s) ago | 1
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
8 hour(s) ago | 2
ஜூன் 14, 2012திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில், வெள்ளையன் - சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக, 1930ல் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். தன் 4 வயதில் தந்தையை இழந்து, யதார்த்தம் பொன்னுசாமியின் மதுரை ஸ்ரீபாலகான சபா நாடக குழுவில் சேர்ந்து நடிக்க துவங்கினார். அங்கு, சிவாஜி கணேசனும், இவரும் போட்டி போட்டு வசனங்களை மனப்பாடம் செய்தனர்.முதலில் பெண் வேடத்திலும், பின் முக்கிய வேடங்களிலும் நடித்த இவர், என்.எஸ்.கே., நாடக குழுவில் சேர்ந்து, எம்.ஆர்.ராதா உள்ளிட்டோருடன் நடித்து புகழ் பெற்றார். மங்கையர்கரசி திரைப்படத்தில், அப்பாவியாக அறிமுகமானார்.அவரது அம்மா, 'காக்கா புடிடா... காக்கா புடிடா' என்பார். இவர், நிஜ காக்காவை பிடித்து வருவார். அதிலிருந்து, என்.எஸ்.கே., இவரை, 'காக்கா' ராதாகிருஷ்ணன் என்றழைக்க அதுவே நிலைத்தது. நல்லதம்பி, வனசுந்தரி, தேவர் மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில், யதார்த்தமான குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். தன் 82வது வயதில், 2012ல் இதே நாளில் மறைந்தார். சிவாஜி கணேசனை திரைத் துறையின் பக்கம் திருப்பிய, பழம்பெரும் நடிகர் மறைந்த தினம் இன்று!
6 hour(s) ago | 1
7 hour(s) ago | 1
8 hour(s) ago | 2