உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 29, 1893 மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், பிரபோத் சந்திரா -- நிரோத்பாஷினி தம்பதியின் மகனாக, 1893ல் இதே நாளில் பிறந்தவர், பிரசந்தா சந்திர மஹாலனோபிஸ். இவர், கோல் கட்டா பிரம்மோ ஆண்கள் பள்ளியில் இடைநிலை வகுப்பையும், அங்குள்ள மாநில கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியலும் முடித்தார்.லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் மெட்ரிக்குலேட், கணித, இயற்கை அறிவியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்று, உயரிய ஊக்கத்தொகையை பெற்றார். அங்கு, கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் நண்பரானார். விடுமுறையில் கோல்கட்டா திரும்பிய போது, முதல் உலகப்போர் துவங்கியதால், அங்குள்ள மாநில கல்லுாரியில் இயற்பியல் பேராசிரியரானார். தொடர்ந்து, தரவுகளின் அடிப்படையில், வானிலை, மானுடவியல் துறைகளில் புள்ளியியல்திறமையை சோதித்து, வங்க பஞ்சம் உள்ளிட்டவை குறித்த ஆய்வு கட்டுரைகளை எழுதினார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தை துவக்கி, சி.ஆர்.போஸ் உள்ளிட்டோரை அதில் நியமித்தார்.இந்தியாவில் புள்ளியியல் படிப்பு, சட்டம் உருவாக காரணமானார். 'பத்ம விபூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1972, ஜூன் 28ல் தன் 79வது வயதில் மறைந்தார். தேசிய புள்ளியியல் தினத்துக்கு காரணமான அறிஞர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை