| ADDED : மே 06, 2024 01:16 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூவநாதபுரத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் வேல் ஈஸ்வரன் 38, பலியானார். தந்தை முருகேஸ்வரன் 42, அவரது 13 வயது மகன் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.சிவகாசி சுற்றியுள்ள பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. மழை பெய்ததை தொடர்ந்து பூவநாதபுரம் பஸ் ஸ்டாப்பில் மழையில் நனையாமல் இருப்பதற்காக சிலர் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் வடபட்டி மேலுாரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி வேல் ஈஸ்வரன் 38, இறந்தார். பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரன் 42, அவரது 13 வயது மகன், வடபட்டி மேலுார் சேவியர் ராஜ் 38, காயமடைந்தனர். மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.