உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு; மக்கள் திரள் போராட்டம் நடத்த தீர்மானம்

புதிய தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு; மக்கள் திரள் போராட்டம் நடத்த தீர்மானம்

மயிலாடுதுறை:சீர்காழி அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்தனியார் பவர் பிளான்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும் பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர் இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது இதனைத் தொடர்ந்து வருவாய் துறை இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கமிங் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா சி.பி.ஐ.எம்.எல். கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathiesh
மே 13, 2024 14:41

ஒரு காரணமும் கிடையாது ஏதாவது நலத்திட்டம் வந்தால் எதிர்க்க வேண்டும் அவ்வளவுதான் சோலார் பிளான்ட் தான் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி முறை இந்த லட்சணத்தில் அறிவாளிகள் மிக்க மாநிலம் னு பெருமை வேற


Gothai Natarajan
மே 13, 2024 09:23

தமிழ மக்கள் சிலர் இன்னும் முட்டாளாக தான் இருக்கிறார்கள் மணி நேரமும் மின்சாரம் வேண்டும் ஆனால் பவர் பிளாண்ட் வேண்டாம் மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்


Balakrishnan karuppannan
மே 13, 2024 08:43

கம்யூனிஸ்ட் இருக்காங்க அப்படின்னா திட்டத்துக்கு மூடு விழா தான் சொந்தமா யோசிச்சு மக்களுக்கு இதுவரை என்ன செஞ்சிருக்காங்க ?


Sriman chandru C R
மே 13, 2024 08:24

மக்களை இன்னும் மூட்டாள் ஆக்கி அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் காணும் அரசியல் கட்சிகள் ஓரு நாட்டின் எதிர் கால மின்சார தேவைக்கு பெரிதும் பங்களிக்க போவது சோலார் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து தர கூடிய ஒரு அருமையான வாய்ப்பை தடுத்து அதன் மூலம் அரசியல் கட்சில்கள் மக்களை வைத்து ஆதாயம் கான முயற்சிஎன்ன பொழப்பு டா இது


rama adhavan
மே 13, 2024 04:12

எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு இவற்றை எல்லாம் ஒடுக்க வேண்டும் இம் மாதிரி போராட்டங்கள் மாநில வளர்ச்சியை நசுக்கும்


Balasubramanyan
மே 12, 2024 23:48

Best example how our Dravida paries mislead the innocent village people Solar plant is absolutely essential Central govt already encouraging solar plant for house and give subsidies The Tamilnadu electricity board also encouraging central government order


panneer selvam
மே 12, 2024 22:59

Look how the people are misled to oppose a solar power plant What way it affects the residents ? Another classic example of negative mentality infused by Dravidian parties in Tamilnadu Just switch off the power to the home of agitators , then they will realize the importance of electricity


S.kausalya
மே 12, 2024 22:50

எதுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் புரியவில்லையே காரணம் சொல்லுங்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை