மேலும் செய்திகள்
ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்
1 hour(s) ago | 1
ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார்
4 hour(s) ago
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
5 hour(s) ago
சென்னை:பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், சுயேச்சை சின்னத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.அவர் அளித்த பேட்டி:பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். மூன்றாம் முறையாக, அவர் பிரதமராக வந்தால், அனைத்து நிலைகளிலும், இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். அ.தி.மு.க., மற்றும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, முழு ஆதரவை அளித்துள்ளோம். எங்கள் இலக்கு, இரட்டை இலை சின்னத்தை பெறுவது. அதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லோக்சபா தேர்தல் வந்துள்ளது. தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றனர். அதை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், தொண்டர்களின் பலத்தை நிருபிக்க, ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.ஒரு தொண்டரை நிறுத்துவதை விட, நானே களத்தில் நின்று பலத்தை நிரூபிக்க உள்ளேன். தொகுதிகளை அதிகம் தர, அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதாவது:ராமநாதபுரம் தொகுதியில், லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில், பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோருடன் கருத்து வேறுபாடு இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து நிற்கவில்லை; அதை பெற நிற்கிறோம். அ.தி.மு.க., கூட்டணி அணி அல்ல; அது பிணி.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 1
4 hour(s) ago
5 hour(s) ago