உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிம கொள்ளையால் அரசுக்கு நிதியிழப்பு: சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு

கனிம கொள்ளையால் அரசுக்கு நிதியிழப்பு: சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சட்டவிரோத கனிமவள கொள்ளையால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கவும், கனிம கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சட்ட விரோதம்

அவரது புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலைய துறைக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை, ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலைய துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த பின், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும், கிருஷ்ணகிரி பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, சேலம் சரக டி.ஐ.ஜி., ஆஜரானார். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினர். அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, மக்கள் பணத்தில் இருந்து ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கனிமவள கொள்ளையை பார்க்கும்போது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கனிமங்கள் எடுக்க உரிமம் வழங்கப்பட்ட விபரங்களை, சேலம் சரக டி.ஐ.ஜி.,யிடம் ஒரு வாரத்தில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி., ஆய்வு செய்து, சட்டவிரோத குவாரி நடந்திருந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராகவும், குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுக்க, வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை ஆகியவை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் விசாரணை

கனிம கொள்ளையால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பையும் மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க, கனிமவள உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான விசாரணை இன்றி முடிக்கப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க வேண்டும்.அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விசாரணையை, ஆகஸ்ட் 28க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Baskaran M
ஜூலை 29, 2024 21:13

Court directions to the concern department were noticed with poor response. Many of the crimes occured with the knowledge of their higher supervising officials. Hence they try to save their subordinates by defending their subordinates acts.


Sridhar
ஜூலை 27, 2024 15:00

இது சட்டவிரோத செயல்களில் அரசும் அரசு அதிகாரிகளுமே ஈடுபடுவார்கள், அவர்களை கோர்ட் செல்லமா கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். அரசும் சரின்னு தலையை ஆட்டிட்டு அந்தப்பக்கம் போயி மத்திய அமலாக்கத்துறை சிபிஐ போன்றவை உள்ளே வராமல் பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..


Sridhar
ஜூலை 27, 2024 14:47

சட்டவிரோத செயல்களில் அரசும் அரசு அதிகாரிகளுமே ஈடுபடுவார்கள், அவர்களை கோர்ட் கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். அரசும் சரின்னு தலையை ஆட்டிட்டு அந்தப்பக்கம் போயி மத்திய அமலாக்கத்துறை சிபிஐ போன்றவை உள்ளே வராமல் பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..


Sridhar
ஜூலை 27, 2024 14:47

அவர்களை கோர்ட் செல்லமா கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..


GMM
ஜூலை 27, 2024 07:54

சட்ட விரோதமாக கனிம வளம் எடுக்க பட்ட போது, தமிழகத்தில் எந்த நிர்வாக, குற்ற அமைப்பும் தடுக்கவில்லை. ஆகவே பலர் உடந்தை. சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்து இருக்கும். அவர் பணி வேறு. மத்திய வருமான வரி, கனிம துறை, அமலாக்க துறை மற்றும் புலனாய்வு பிரிவு மட்டும் தான் விசாரிக்க வேண்டும். அரசு, குவாரி வழக்கறிஞர்கள் இணைந்து வழக்கை நடத்துவது போல் தெரிகிறது. பல கோடிகள் இழப்பை சில லட்சம் சம்பளம் வாங்கும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் எப்படி வசூலிக்க முடியும்.? சம்பளம், பென்ஷன் வாங்கும் அந்த தொகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் வசூலிக்க வேண்டியது அவசியம்.


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 07:18

கோயில் நிர்வாகத்தில் கொள்ளையர்கள் புகுந்தால் கோயில்கள் காணாமல் போகும். வெள்ளைக்காரன் கூட இது போல செய்ய பயப்பட்டார். சொத்துக்களை அறநிலையத் துறையை வைத்து சாப்பிடுகிறார்கள்.


Bala Paddy
ஜூலை 27, 2024 06:58

இந்த கொள்ளை கூட்டத்தையும் அதிகாரிகளையும் ஒன்னும் பண்ண முடியாது. இந்த நீதிபதிகள் வேண்டுமானால் சவுக்கு சங்கர் போல இன்னொரு ஜீவனை உள்ள போடலாம். அவ்ளோதான் இவய்ங்க பவர்.


Venkateswaran Rajaram
ஜூலை 27, 2024 06:04

திருடியதே அரசும் அரசு சம்பந்தப்பட்டவர்களும் அரசியல்வாதிகளும் தான் நீதிபதி அவர்கள் அவர்களிடமே நன்றாக விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார் மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது


Duruvesan
ஜூலை 27, 2024 05:59

ஆக மக்களின் வரி பணத்தில் வாழும் ஓசி சோறு பின்முடியும், துரையும் நல்லவர்கள். எல்லா சாட்சியும் பல்டி. உயிர் முக்கியம் விடியல் சாரே


Dharmavaan
ஜூலை 27, 2024 05:14

தெளிவில்லாமல் என்ன தீர்ப்பு இனி இந்த கொள்ளையை தடுக்க உத்தரவு இல்லை.


மேலும் செய்திகள்