உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்திற்கு மே 9ல் பத்மபூஷண்: டில்லி செல்கிறார் பிரேமலதா

விஜயகாந்திற்கு மே 9ல் பத்மபூஷண்: டில்லி செல்கிறார் பிரேமலதா

சென்னை : ''விஜயகாந்திற்கு மே 9ம் தேதி டில்லியில் பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளது'' என தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா கூறினார்.சென்னையில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த அவர் கூறியதாவது:தமிழகத்திற்கு 'அலர்ட்' கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. எனவே மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் வழங்க முன்வர வேண்டும். விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுவது குறித்து மூன்று நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்தது.

விருதை பெறுவதற்கு 8ம் தேதி டில்லிக்கு வரும்படி அழைத்துள்ளனர். விருது வழங்கும் விழா 9ம் தேதி மாலை 6:30 மணிக்கு நடக்க உள்ளது. இரண்டு பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால் நானும், என் மூத்த மகன் விஜயபிரபாகரனும் டில்லி செல்ல உள்ளோம். நீலகிரி தொகுதியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நான்கு மணிநேரம் 'சிசிடிவி' கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.அங்கு என்ன நடந்தது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தலைநகர் சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது தலைகுனிவு. வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டுப்போட செல்லவில்லை என்று காரணம் கூறுகின்றனர். கடற்கரை, பூங்கா, பப் சென்று அரசியல் பேசுபவர்களும், இலவச அறிவுரை கூறுபவர்களும் ஓட்டளிக்கவில்லை என்று தெரிகிறது.கருத்து சொல்வதை விட்டு விட்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும். பிரதமர் என்பவர் நாட்டிற்கு முதன்மையானவர். அவர் சொல்லும் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்க கூடிய விஷயம். பா.ஜ., என்றாலே முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்ற கருத்து உள்ளது. எனவே பிரதமர் மோடி கவனமுடன் பேச வேண்டும். அவரது பேச்சில் உள்நோக்கம் இருந்தால் அது குறித்து அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S R George Fernandaz
ஏப் 29, 2024 10:10

கூட்டணி அமைந்ததால் விருது, விருந்து திருவிஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்லவர், மரியாதைக்குரியவர் முற்றிலும் உண்மை ஆனால் பத்மபூஷன் கிடைக்கிற அளவுக்கு அவர் அப்படி என்ன தான் செய்தார்?


Indhuindian
ஏப் 29, 2024 09:58

What for this award? If you treat him as a cine star, he was just a mediocre entertainer Then why this award? May be in anticipation of a political alliance Now that the expectation has been nullified, the givers should be regretting in silence


Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:16

தீம்காவின் பங்காளிகளுடன் சேர்ந்து கட்சியை ஒழித்துக்கட்டிய தீம்காவுக்கு மறைமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பது துரதிஷ்ட வசமானது தீம்காவை எதிர்க்க இருந்த ஒரே ஒரு திராவிடக் கட்சியும் காலி பெருங்காய டப்பா என்பது சோகமானது


.Dr.A.Joseph
ஏப் 29, 2024 03:59

வாழ்த்துகள் அது என்னமோ தெரியவில்லை விருதுகளை, எல்லா ஆட்சியாளர்களும் நல்லவர்கள் செத்தால்தான் விருது கொடுக்கிறார்கள்


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ