உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 அரசு டவுன் பஸ்களில் அச்சு முறிவு: டப்பா வண்டியால் தவித்த பயணியர்

2 அரசு டவுன் பஸ்களில் அச்சு முறிவு: டப்பா வண்டியால் தவித்த பயணியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.என்.68. என்.0427 என்ற டவுன் பஸ், நேற்று காலை பயணியருடன் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள கரந்தை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் அச்சு முறிந்து, பஸ் நகர முடியாமல் நடுவழியிலேயே நின்றது.

நடுவழியில் நின்ற பஸ்

இதனால், பயணியர் இறக்கி விடப்பட்டனர். மேலும், காலை நேரம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சிலர் மாற்று பஸ்சில் ஏறி சென்றனர்.அதுபோல, டி.என்.68.எண்.0522 என்ற டவுன் பஸ் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு பயணியருடன் காந்திஜி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ்சின் அச்சு முறிந்து, நடுவழியில் பஸ் நின்றது. இதனால், பயணியர் அவதிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து வந்த மெக்கானிக்குகள், இரண்டு பஸ்களையும் டிப்போவுக்கு இழுத்து சென்றனர்.தஞ்சாவூரில் இயங்கும் அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலானவை, பழைய டப்பா வண்டிகளாகத் தான் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என, பயணியர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இன்னமும் நடக்கவில்லை. போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி., துணைத் தலைவர் மதிவாணன் கூறியதாவது:தஞ்சாவூரில் இரண்டு டவுன் பஸ் டெப்போக்களில் 110 பஸ்கள் இருந்தன. தற்போது 80 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

டூல்ஸ் கிடையாது

பஸ்களை பராமரிப்பதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். பஸ்களை சீரமைப்பதற்கான டூல்ஸ் போதிய அளவில் கிடையாது.உதிரி பாகங்கள், பிரேக் ஆயில் உள்ளிட்ட பொருட்களை போக்குவரத்து நிர்வாகம் வாங்கி தருவது கிடையாது. அவரசமாக பஸ்களை சீர் செய்ய வேண்டும் என்றால், கிளை மேலாளர்கள் தங்கள் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி, சீரமைப்பு செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், பஸ்களை இயக்குவது கடினமாக மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

kuppusamy India
ஜூன் 09, 2024 16:49

தெரு மாடல் பஸ்..... அப்படித்தான் இருக்கும்


Ramesh Sargam
ஜூன் 09, 2024 12:39

2026 -ஆம் வருட தேர்தலில் திமுக ஆட்சி இப்படி முறியப்போகிறது என்று முன்னமே ஒரு உதாரணம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 09, 2024 11:05

சென்னை மூர்மார்க்கெட் போன்றவற்றில் பழைய உதிரி பாகங்கள் வாங்கி பெயிண்ட் அடித்து புதியதாக கணக்கு காண்பித்து மாட்டி விடுவார்கள். அதான் இப்படி இருக்குது


சிவா
ஜூன் 09, 2024 09:43

நான் பத்து வருடங்களாக மேலாக அரசு பேருந்தில் பயணம் செய்யவில்லை இப்பொழுது கொடைக்கானல் சென்று இருந்தேன் பயணம் வித்தியாசமமாக இருக்க இரயில் மற்றும் பேருந்துகளில் சென்று இருந்தேன் ரயில் வசதி முன்னேற்றம் கண்டு உள்ளது ஆனால் பேருந்து வசதி மகா மட்டம் ஒரே குப்பை அதை சுத்தம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆனதோ ஒரே சத்தம் வேறு


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 09:23

இதற்குத்தான் ஓட்டுப் போட்டாயா பாலகுமாரா?


somasundaram alagiasundaram
ஜூன் 09, 2024 08:52

திராவிடம் னா என்ன என்று கேட்டார்களே... இது தாண் திராவிடம்..


ராமகிருஷ்ணன்
ஜூன் 09, 2024 08:43

திமுக அரசின் ஊழல் அமைச்சர்கள் அதிகாரிகளின் பண வெறிக்கு பொதுமக்கள் பலி. தரமற்ற உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் என்று போக்குவரத்து துறையில் விசாரணை வரும்.


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 10:08

அதீம்கா ஆட்சியில் வாங்கிய உதிரிப்பாகம் என்பர்... எளிதில் எடப்பர் மீது பழியை போட்டுவிடுவார்கள்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 09, 2024 08:30

இதுதான் திராவிட மாடல். ஓட்டு போட்டால இப்படித்தான் அனுபவிக்க வேண்டும். மக்கள் திருந்த வேண்டும்


veeramani hariharan
ஜூன் 09, 2024 07:48

My dear T.N. Go for freebies and enjoy all these non-sense. Both dravidian parties spoiled our state.


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 09:19

எனது பல PhD நட்புகள், தரவுகளின் அடிப்படையில், தமிழகம் இன்னும் உட்சாணிக்கொம்பில் இருப்பதாகவே சொல்கிறார்கள். அவர்களிடம் டக்ளஸ் சொன்ன முப்பது கோடி பற்றி கேட்டால் டக்ளஸ் மத்திய மந்திரி பதவிக்காக அப்படி ஒரு பொய் சோன்னதாக சொல்கிறார்கள். ஆக இதற்க்கு தீர்வு பேருந்துக்கட்டணத்தை உயர்த்துவதுதான் என்று நுகர்வோரின் தலையில் மிளகாய் அரைக்கப்படும்


அனுமந்தராவ்
ஜூன் 09, 2024 07:43

எங்கிருந்து கொண்டாந்தாங்களோ இதுமாதிரி பஸ்களை. தத்தி மந்திரிகள், தத்தி அதிகாரிகள், தத்தி மக்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை