உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை: வாசன் பேச்சு

மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை: வாசன் பேச்சு

சென்னை: எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: சிறு, குறு தொழில்களுக்கான மின்கட்டணத்தை, தி.மு.க., அரசு 3வது முறையாக உயர்த்தி உள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?.

நம்ப தயாராக இல்லை

மக்கள் தலையில் சுமையை ஏற்றி, அவர்களை ஏமாளியாக்க நினைக்கிறார்கள்.இனிவரும் காலங்களில் தி.மு.க.,வினரை நம்ப வாக்காளர்கள் தயாராக இல்லை. தி.மு.க.,அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் குடிநீர் வரி மற்றும் மின்சார வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி உள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை.

அரசின் தந்திரம்

தமிழக மின்சார வாரியத்தின் கடன் சுமைக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். இது அரசின் தந்திரம் என்பதை மக்கள் உணர வேண்டும். மின்கட்டணம் உயர்வு தொடர்பாக, வரும் திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுக்க உள்ளோம். தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kulasekaran A
ஜூலை 21, 2024 05:41

ஆமா.....நீ யாரு?


Ravichandran S
ஜூலை 20, 2024 20:06

அது சரி 18000 கோடியாக இருந்தது எப்படி 37000 கோடியாக மாறியது அப்ப ஊழல் நடந்ததா அல்லது நிர்வாக திறமையின்மையா


venugopal s
ஜூலை 20, 2024 18:43

நீங்களும் எதற்கெடுத்தாலும் மாநில அரசை குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பதையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?


அப்புசாமி
ஜூலை 20, 2024 17:52

அரசு வரி போட்டு, கட்டணங்களை ஏத்தினால் அது தேஷ்பக்தி ஹைன்.


அப்புசாமி
ஜூலை 21, 2024 12:21

மக்கள் மாத்தி மாத்தி வெப்பாங்க ஆப்பு.


பேசும் தமிழன்
ஜூலை 20, 2024 17:18

எல்லாத்துக்கும் மத்திய அரசு மீது பழி போட்டால்... இங்கே ஒரு அரசு எதற்க்கு ???


Oviya Vijay
ஜூலை 20, 2024 15:05

. நான் சொல்வதைக் கேளுங்கள்... நேராக உங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள ஸ்டேஷனரி கடைக்கு சென்று இந்த வருட டைரி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இன்றைய தேதியில் இப்போது நான் குறிப்பிடும் செய்தியை குறித்துக் கொள்ளுங்கள். இனி எக்காலத்திலும் தமிழகத்தில் வெற்றிபெறப் போவதில்லை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நான் சொல்வது நடக்கும்.


Velan
ஜூலை 20, 2024 14:06

அது இருக்கட்டும் முதல்ல நம்மள ஏத்துகலை


Premanathan Sambandam
ஜூலை 20, 2024 13:25

கட்டணம் ஏறினால் இறங்காது. இது தெரியாதா மக்களுக்கு? நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்கிறார் தலைவர்


Rajinikanth
ஜூலை 20, 2024 12:17

மத்திய அரசின் பட்ஜெட் வெளியே வரட்டும். தேர்தல் முடிவடைந்து விட்டதால், நிச்சயம் விலை உயர்வு, வரி உயர்வு எல்லாம் இருக்கும். அவற்றிற்கு இந்த உலக மகாத்தலைவர் வாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்


Rajinikanth
ஜூலை 20, 2024 12:13

"பழி போடுவதை" நிறுத்துங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி