| ADDED : ஜூலை 30, 2024 11:26 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் எட்டையபுரம் சாலையில் தலைமை தபால் அலுவலகம் செயல்படுகிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், தலைமை தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பதிவு தபால் அனுப்புவதற்கு தினமும் அதிக பேர் வந்து செல்கின்றனர்.இந்த பிரிவில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பணியில் இருக்கிறார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை; ஹிந்தி மொழி மட்டும் தெரிவதால் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள், அவதிக்கு உள்ளாகின்றனர்.இதுதொடர்பாக, போஸ்ட் ஆபிஸ் அதிகாரிகள் கூறும் போது,'ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, ஒரு நாள் மட்டுமே அந்த நபர் பணியில் அமர்த்தப்பட்டார். வரும் காலங்களில் இது போன்ற தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்' என்றனர்.