உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெடிக்கல் ஷாப்பில் திருட்டு போலீஸ் விசாரணை

மெடிக்கல் ஷாப்பில் திருட்டு போலீஸ் விசாரணை

மரக்காணம்: மரக்காணம் அருகே மெடிக்கல் ஷாப் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 41; இவர், முருக்கேரி பஸ் நிறுத்தத்தில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவர், நேற்று காலை மெடிக்கல் ஷாப் திறக்க சரவணன் வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கல்லாப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய், மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாக்லேட் மற்றும் உணவு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை