உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகவலைதளத்தில் பரப்பப்படும் வீடியோவால் சஸ்பெண்ட்; கடமையை செய்வது தவறா என போலீசார் புலம்பல்

சமூகவலைதளத்தில் பரப்பப்படும் வீடியோவால் சஸ்பெண்ட்; கடமையை செய்வது தவறா என போலீசார் புலம்பல்

மதுரை : தமிழகத்தில் போலீசாரை குறிவைத்து சமூகவலை தளத்தில் ஆளாளுக்கு வீடியோ 'அப்டேட்' செய்வது அதிகரித்துள்ளது. அது 'வைரல்' ஆகிறது என்பதற்காக சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம், சஸ்பெண்ட் செய்கின்றனர். கடமை தவறாமல் பணி செய்தால் இதுதான் தண்டனையா என போலீசார் புலம்புகின்றனர்.சென்னை மெரீனா பீச்சில் இரவு 7:30 மணியளவில் ஒரு பெண், ஒரு ஆண் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விசாரித்தார். உரிய பதில் அளிக்காததால் 'நீங்கள் கணவன், மனைவியா' எனக்கேட்க, 'ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் தம்பதியாகதான் இருக்க வேண்டுமா' என அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை வீடியோவும் எடுத்தார்.

போலீசார் அதிர்ச்சி

அதை சமூகவலைதளத்தில் அவர் 'அப்டேட்' செய்ய 'வைரலானது'. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இடமாற்றப்பட்டார்.உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போதை இளைஞரிடம் ஏட்டு விசாரித்தபோது தன் தலையை சுவரில் மோதச்செய்து காயப்படுத்திக்கொள்ள முயற்சித்தார். அந்த இளைஞனை கையால் அடித்து உட்கார ஏட்டு கூறினார்.இதை ஸ்டேஷனில் இளைஞனை ஏட்டு தாக்கியதாக 'எடிட்' செய்து சிலர் 'அப்டேட்' செய்தனர். இதுதொடர்பாக ஏட்டுவிடம் விசாரணை நடந்தது.'போலீசார் கடமையை செய்தால்கூட தவறு என துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதால் போலீஸ் சீருடை மீதான மதிப்பும், பயமும் குறைந்து விடும் அபாயம் உள்ளது' என்கின்றனர் சில போலீஸ் அதிகாரிகள்.மெரீனா பீச் விவகாரத்தில் அந்த போலீஸ்காரரை இடமாற்றியதற்கு 'இருவரும் கணவன், மனைவியா' என கேட்டதுதான் காரணம் என போலீஸ் இணைகமிஷனர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். இது ஒட்டுமொத்த போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குற்றங்கள் அதிகரிக்கும்

போலீசார் கூறியதாவது: மெரீனா பீச்சில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அந்த போலீஸ்காரர்தானே பொறுப்பு. அவர் தன் கடமையைதான் செய்துள்ளார். கேள்வி கேட்டது தவறு என ஒவ்வொருவரும் புகார் கூற ஆரம்பித்தால் எந்த விசாரணையிலும் சரியான பதில் கிடைக்காது. போலீசார் பொது இடத்தில் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்களா, அத்துமீறினார்களா என்று தான் பார்க்க வேண்டும். வீடியோ அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.இது தொடர்ந்தால் போலீசார் மீது ஆளாளுக்கு புகார் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பயம் போய் விடும். குற்றங்கள் அதிகரிக்கும். இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உரிய வழிமுறைகளை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ravanan
பிப் 22, 2025 15:35

தற்போது உள்ள சட்டம் பிரிட்டிஷ்காரர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம். இதனை தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த வேண்டும்.


skanda kumar
பிப் 22, 2025 08:31

டாஸ்மாக் தமிழ்நாட்டில் போலீஸ் தி மு க, அடிமை . அதனால் ரௌடிகளும் , சமூக விரோதிகளும் பயம் இல்லாமல் திரிகிறார்கள். ஒரு காலத்தினால் சிறந்து இருந்த தமிழ்நாடு போலீஸ் இப்போது பலம் இன்றி இருக்காது. டாஸ்மாக் மஹிமை


orange தமிழன்
பிப் 22, 2025 08:02

மக்களிடம் காவல் துறையினர் மீது நம்பிக்கை எப்பொழுதோ போய் விட்டது (1967 முதல்)......ஆனால் அதே சமயம் மிக நேர்மையான காவல் துறையினர் இருக்கிறார்கள்....ஒரு வீடியோ கிளிப் வைத்து தண்டனை தருவது என்றால் நாளை அது பெரிய அதிகாரிகளுக்கு கூட நேரிடலாம்.....இந்த நடவடிக்கை காவல் துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தும் அது மக்களுக்கு தான் ஆபத்தாக முடியும்.....


Kalyanaraman
பிப் 22, 2025 07:39

ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது என்று சட்டமே உள்ளது மீறினால் ஆசிரியர்களுக்கு தண்டனை. இதன் பரிணாம வளர்ச்சியாக இப்போது காவல்துறையில் நடக்கிறதோ?. இதுதான் திராவிட மாடல். அடியாத மாடு படியாது. லஞ்சம் வாங்கி வாங்கி ஏற்கனவே பெயர் கெட்டுப் போய்விட்டது ‌ இனிமேல் கெடுவதற்கு என்ன இருக்கிறதோ?


raja
பிப் 22, 2025 06:33

இது கேடுகெட்ட இழிபிறவி கொள்ளைகூட்ட கோபால் புற திருட்டு குடும்பத்துக்கு எவல் துறையாய் ஆகி போனதின் விளைவு..


Padmasridharan
பிப் 22, 2025 06:26

விசாரணை என்கிற பெயரில் மரியாதை குறைவாகத்தான் நடந்து கொள்கிறார்கள் காவல்துறையை சேர்ந்த பலரும் பணம் பிடுங்குவதற்காக. வேண்டுமென்றால் இரு தரப்பினரும் video எடுத்து போடட்டும். இதில் வண்டியில் ஏற்றிக்கொண்டு அறைக்கு கூட அழைத்து செல்கிறார்கள் பாலியல் தொல்லைகளும் கூட சில அத்துமீறும் காவலர்களால். சட்டத்தை இவங்க கையில எடுத்துக்கிட்டு வெளியில் வராத எத்தனையோ சம்பவங்கள் chennai beaches ல நடக்கின்றது. CCTV இல்லாத இடத்துலதான் இவங்களோட சம்பவங்கள் நடக்கின்றது


நிக்கோல்தாம்சன்
பிப் 22, 2025 05:37

கேள்வி கேட்ட போலீசின் முகபாவனை மிகவும் கடுமையாக இருந்ததை பார்க்க மறந்து விடீர்களா , போலீசார் என்றால் திமிருடன் நடந்து கொள்ளலாம் என்று யாரு உரிமை கொடுத்தார்கள் அந்த மனநிலை மாறவேண்டும்


விமலா
பிப் 22, 2025 04:34

கமிசனரு செய்ததது தவறு கண்டிக் கதக்கது


J.V. Iyer
பிப் 22, 2025 04:30

நல்லவர்களுக்கு காலமில்லை இந்த இருளகத்தில், திராவிஷ ஆட்சியில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை