மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
5 hour(s) ago | 2
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
5 hour(s) ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
5 hour(s) ago
மதுரை: தமிழகத்தில் புதிதாக 'பொன்னுக்கு வீங்கி' எனப்படும் 'மம்ஸ்' வைரஸ் நோய் பெண் குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கின்றனர் டாக்டர்கள்.அவர்கள் கூறியதாவது: குழந்தைகள் பிறந்த ஒன்பதாவது மாதத்தில் எம்.எம்.ஆர்., எனப்படும் 'மம்ஸ்… மீஸில்ஸ்… ரூபெல்லா' வைரஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டது. 'மம்ஸ்' வைரஸ் என்பது உமிழ்நீர் சுரக்கும் சுரப்பியை தாக்கும் ஒரு வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் தாடைப்பகுதி காது சேரும் இடத்தில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாது. உணவு சாப்பிட முடியாது. வலி, காய்ச்சலால் குழந்தைகள் அவதிப்படுவர். பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளே இந்நோய்க்கு இலக்காகி இருந்தனர். 2016 ம் ஆண்டு வரை மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் எம்.எம்.ஆர். முத்தடுப்பு ஊசி குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது. 2014 ம் ஆண்டு வரை தடுப்பூசியால் குழந்தைகள் இந்நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.2016ம் ஆண்டுக்கு பிறகு 'மம்ஸ்' வைரஸ் எதிர்ப்புக்கான தடுப்பு மருந்து நிறுத்தப்பட்டது. 'மீஸில்ஸ், ரூபெல்லா' தடுப்புக்கான எம்.ஆர். தடுப்பூசியே தற்போது வரை குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. பத்தாண்டுகளாக இந்நோயின் தாக்கமின்றி குழந்தைகள் இருந்த நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவியுள்ளது. மதுரையில் மட்டும் 10 குழந்தைகளும் பிற மாவட்டங்களில் 5 முதல் 7 குழந்தைகள் வரை பொன்னுக்கு வீங்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை என்ன
வெயில் காலத்தில் பரவும் நோய் இது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் மூலம் மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும். தொண்டைவலி, காய்ச்சலுக்கு மருந்துகள் கொடுக்க முடியுமே தவிர இதற்கென தனிப்பட்ட மருந்து கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கை வைத்தியம் செய்யக்கூடாது.இவ்வாறு தெரிவித்தனர்.போலியோ நோய் ஒழிக்கப்பட்ட நிலையிலும் தற்போது வரை குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. அதேபோன்று மீண்டும் எம்.எம்.ஆர். தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
5 hour(s) ago | 2
5 hour(s) ago
5 hour(s) ago