உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் நரேந்திர மோடி இன்று நெல்லையில் பிரசாரம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று நெல்லையில் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தென் மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் இன்று பிரசாரம் செய்கிறார்.பிரதமர் மோடி இம்மாதம் 9ம் தேதி மாலை சென்னை வந்தார். அப்போது, தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தி.நகர் பாண்டிபஜாரில், 'ரோடு ஷோ' நிகழ்ச்சி வாயிலாக பிரசாரம் செய்தார். அடுத்த நாள் காலை, வேலுாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மதியம், கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டங்களில், நீலகிரி வேட்பாளர் மத்திய அமைச்சர் முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.இன்று பிரதமர் மோடி பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார். அவர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கிறார். ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, நாளை பிரசாரம் செய்கிறார்.பின், மதியம் சென்னை வரும் அவர், கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு கோருகிறார். மாலை திருவண்ணாமலை செல்லும் ராஜ்நாத் சிங், அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு பிரசாரம் செய்கிறார். இரவு தாம்பரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், ஸ்ரீபெரும்புதுார் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஏப் 15, 2024 11:24

பேசுங்க ஜீ... நல்லாப் பேசி கச்சத் தீவை தனிப்பட்ட முறையில் மீட்போம்னு சொல்லுங்க. ஓட்டு விழுதான்னு பாப்பம்.


Sampath Kumar
ஏப் 15, 2024 11:22

நெல்லை இப்போ பிஜேபிக்கு தொலையாகி போனது எல்லாம் அந்த நாலு கோடி சமாசாரம் தான் இவரு வந்துபேசினாலும் அங்கே ஒன்னும் ஏடுபடாது


venugopal s
ஏப் 15, 2024 09:15

எத்தனை தடவை யார் வந்து முக்கினாலும் தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சி பலிக்காது!


Venkatesan Pichaimuthu
ஏப் 15, 2024 10:37

திராவிடம் நம்மை அடிமையாகியது போதும், வீராப்பு பேசி சும்மா இருப்பதைவிட பிழைக்க முன்னேற தற்போது இவர்களை விட நல்லவர் இல்லை


Kasimani Baskaran
ஏப் 15, 2024 05:31

கடும் உழைப்பின் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயல்வது சிறப்பு திராவிட மடத்தின் பொய்களையும் நாடகங்களையும் தோலுரித்துக்காட்டினால் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ