உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில ஆவணங்கள் ஆன்லைன் சேவை வெளியீடு

நில ஆவணங்கள் ஆன்லைன் சேவை வெளியீடு

சென்னை:நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான, 'ஆன்லைன்' சேவை விபரங்களை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, ஆன்லைன் வழியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயன் பெறும் வகையில், பல்வேறு இணையவழி சேவைகளும், பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றன.கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம், நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள, https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எங்கிருந்தும் எந்நேரத்திலும், eservices.tn.gov.inஎன்ற இணையவழி சேவையை பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா, சிட்டா, 'அ' பதிவேடு, புலப்படம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதேபோல, நகர்ப்புற நில அளவை பதிவேட்டின் நகல், நகர நில அளவை வரைபடம், புல எல்லை வரைபடம் ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையையும், அறிந்து கொள்ள முடியும்.கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நில அளவை எண்களுக்கான, புதிய நில அளவை எண்களின் ஒப்புமை விளக்கப் பட்டியல் போன்றவற்றை, tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்சேவைகளை அருகில் உள்ள பொது சேவை மையங்கள் வழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி