உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு; ஆகஸ்ட் 21ல் கவுன்சிலிங் துவக்கம்: நாமக்கல் மாணவர் முதலிடம்

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு; ஆகஸ்ட் 21ல் கவுன்சிலிங் துவக்கம்: நாமக்கல் மாணவர் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று(ஆகஸ்ட் 19) அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மருத்துவ தேர்வுக்குழு, மூலமாக முதல் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 720 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று(ஆகஸ்ட் 19) அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2721 பேர் அதிகம். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 3733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாணவர்

தரவரிசை பட்டியலில், 720 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப்பும், 3வது இடத்தை சென்னை மாணவி சைலஜாவும் பிடித்தனர். 4ம் இடத்தை ஸ்ரீராமும், 5ம் இடத்தை ஜெயதி பூர்வஜாவும் பிடித்தனர். 6வது இடத்தை நாமக்கல் மாணவர் ரோகித்தும், 7வது இடத்தை சபரீசனும் பிடித்துள்ளனர்.

7.5சதவீத இடஒதுக்கீடு

அரசு பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தை சென்னை சைதாப்பேட்டை பள்ளி மாணவி காயத்ரி தேவியும், 3வது இடத்தை தண்டராம்பட் மாணவி அனுஷியாவும் பிடித்தனர்.

வெளிப்படைத் தன்மை

சைதாப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் இருவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். கடந்தாண்டை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது. முதன்மை பெற்ற 10 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு பணியாற்றி, பட்டியலை வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஆக 19, 2024 15:44

நீட் வருவதற்கு முன்பும் இதே நாமக்கல் தர்மபுரி பகுதி மாணவர்கள்தான் பாதி இடங்களை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதும் 24X7 கோச்சிங்தான் காரணம்.


ராஜ்
ஆக 19, 2024 13:48

நீட் இல்லை என்றால் உங்களால் இப்போ சொல்லுற வெளிப்படைதன்மை இருந்து இருக்குமா. i


தமிழ்வேள்
ஆக 19, 2024 13:22

அப்புறம் என்னத்துக்கு நீட் ஐ எதிர்க்கிறீர்கள் ....கல்வித் தந்தைகள் கல்லா கட்டி கும்மாளம் அடிக்க அப்பாவி மாணவர்கள்தான் கிடைத்தார்களா ? திராவிஷம் அழிந்தால்தான் தமிழகம் உருப்படும் .


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ