மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சருக்கு 138 நாட்களுக்கு கழித்துஇலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரேயொரு பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்தாண்டு அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து லோக்சபா தேர்தல் நெருங்கிய சூழலில் கடந்த மார்ச் மாதம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்ற அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.இந்நிலையில் 138நாட்களுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்து, அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் சாய்சரவணன்குமாரிடம் இருந்த குடிமைப் பொருள் வழங்கல் துறை பறிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் நலம், தீயணைப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளை கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய அமைச்சர் திருமுருகனுக்கு குடிமைப் பொருள் வழங்கல், வீட்டு வசதி வாரியம், கலைப் பண்பாடு, பொருளாதாரம் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3