உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில், சர்ச் புதுப்பிக்க கட்டுப்பாடுகள் தளர்வு

கோவில், சர்ச் புதுப்பிக்க கட்டுப்பாடுகள் தளர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை புதுப்பிக்க, கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து வகை கட்டடங்கள் கட்டுவதற்கான, பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், தனியார் நிலங்களில் கட்டப்படும் கோவில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.குறிப்பாக, இந்த கட்டடங்கள் தொடர்பான கட்டுமான திட்ட அனுமதி பெற, மாவட்ட கலெக்டரின் தடையின்மை சான்று பெறுவது கட்டாயம். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்கள் மாதக் கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் காத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இதைக் கருத்தில் வைத்து, தனியார் நிலங்களில் வழிபாட்டு தலங்களை கட்ட, பொது கட்டடங்கள் என்ற வரையறையில் ஒப்புதல் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை அரசு ஏற்றுள்ளது.

இதுகுறித்து, சட்டத்துறை செயலர் கே.நந்தகுமார், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

பொது கட்டட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் கட்டட அனுமதி தொடர்பாக, சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக நிலையான வழிகாட்டி செயல்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி,* தனியார் நிலங்களில் உள்ள கோவில்கள், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை புதுப்பிக்க, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, கலெக்டரிடம் தடையின்மை சான்று பெற வேண்டாம். பழைய கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதற்கும் இது பொருந்தும்* வழிபாட்டு தலங்களின் உரிமையாளர்கள் அல்லது அமைப்புகள், சம்பந்தப்பட்ட துறையிடம் கட்டட அனுமதிக்கு மட்டும் விண்ணப்பித்தால் போதும்* புதிதாக தனியார் நிலத்தில் வழிபாட்டு தலங்கள் முதல் முறையாக கட்டப்படும் நிலையில், அதற்கு கலெக்டரின் தடையின்மை சான்று பெற வேண்டும். இந்த விண்ணப்பத்தின் மீது கலெக்டர், 30 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்* இதுபோன்ற கட்டுமானங்களுக்கு, 'இ - சேவை' மையங்கள் வாயிலாக, ஒற்றைச்சாளர முறையில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை மாற்றம், தனியார் நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்; அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த இப்பிரச்னைக்கு, தீர்வை தந்துள்ள முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் நன்றி' என, தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜூன் 03, 2024 10:57

தனியார் நிலம் குடியிருப்பு, வணிக, விவசாய பயன்பாட்டிற்கு மட்டும். வழிபாட்டு தலங்கள் அமைக்க சுற்றிலும் குடியிருக்கும் மக்கள் தடையின்மை, அரசு அனுமதி தேவை. காலப்போக்கில் தனியார் நிலத்தில் கழிப்பறை, சுடுகாடு.. போன்றவை அமைத்து விடுவர். பின்பு சட்ட ஒழுங்கு நடவடிக்கை அதிகம் தேவைப்படும். போதிய வெளிநாட்டு நிதி கிடைப்பதால், சிறுபான்மையினர் மத வழிபாட்டு தலங்கள் உருவாக்கி, மத மாற்றம் செய்வர். எதற்கும் அரசு சட்ட விதிகள் / கட்டுப்பாடு வகுக்க வேண்டும்.


Dharmavaan
ஜூன் 03, 2024 08:13

வந்தேறிகளுக்கு ஆதரவான திருத்தம் நடைமுறையில் எப்படி செயல்படும் என்பதே சந்தேகம்


மேலும் செய்திகள்