உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்தெழுச்சி பாய்ச்சல்; 2026ல் ஆட்சி அதிகாரம்

புத்தெழுச்சி பாய்ச்சல்; 2026ல் ஆட்சி அதிகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம், தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல்' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது சமூக வலைதள பதிவு:கடந்த 2016ல் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநில கட்சியாக பரிணமித்திருப்பது, தமிழின அரசியல் வரலாற்றில், ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல். சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி என, பல அடக்குமுறைகளை தாண்டி, ஜாதி, மதம், மது, பணம் என புரையோடிப்போன சமூக தீங்குகளை கடந்து, நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் ஓட்டுகள் பெரும் ஜனநாயக மறுமலர்ச்சியாகும்.இத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான ஓட்டுகளை பெற்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. மாநில கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026 சட்டசபை தேர்தலில், மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க உறுதி ஏற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Rajah
ஜூன் 12, 2024 19:15

சீமானுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாவிடினும் அவரது வளர்ச்சியை பாராட்டுகின்றேன். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்குகள் சுத்தமானவை. எதிரியானாலும் நல்லவற்றை பாராட்டியே ஆக வேண்டும்.முதலில் அவர் இலங்கை அரசியலில் இருந்து விடைபெறவேண்டும். தமிழ் ஈழம் அமைக்க முடியாது என்ற யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவர் மக்களை ஏமாற்றுகின்றார் என்று அர்த்தம். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல துயர நினைவுகளை மறந்து விட்டார்கள். சீமான் என்றால் பலருக்கு யார் என்றே தெரியாது. புரிந்து கொணடால் வெற்றி நிச்சயம்.


சோழநாடன்
ஜூன் 12, 2024 15:49

2026 அல்ல.... 2231, 2236வரை சீமான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து 30% வாக்குகளைப் பெறவேண்டும். 2241இல் எதிர்க்கட்சித் தலைவராகி, 2246இல் வேண்டுமானால் ஆட்சியைப் பிடிக்கலாம். இன்னும் 26 ஆண்டுகாலம் காத்திருக்கவேண்டும் சீமான். இடையில் வாய்பில்லை ராஜா......


Muralidharan raghavan
ஜூன் 11, 2024 16:30

அறுபதுகளில் இருந்து தமிழ் தமிழன் என்று முழங்கிய திராவிட கட்சிகள் தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டது ? வைகோவும் இது போன்று முழங்கியவர்தான் ஒன்றும் இல்லாமல் ஒரு தொகுதியோடு அவர் கட்சி ஒதுங்கிவிட்டது. இனி மொழி மற்றும் மத அரசியல்கள் எடுபடாது.


Chinnathambi venka
ஜூன் 11, 2024 12:49

கட்சியை பல முறை வாயை சும்மா வைக்காமல் சொடக்கு போட்டு வாயில் பல தடவை கட்சியை கலைச்சிட்டிங்க .. அரசியல் பேசும் போது நிதானம் வேணும் ப்ரோ ..


Kanagaraj M
ஜூன் 11, 2024 10:43

ஏழை மக்களின் உழைப்பை திருடும் திராவிடமும், தேசிய கட்சிகளும். தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறான் பாரு அதுதான் கொடுமை. தவறு செய்பவனுக்கு துணை போறவன் அடுத்தவர் வாழ்க்கையை திருடுபவன்.


sethu
ஜூன் 11, 2024 09:20

சின்னம் பறிப்பு என்ற பொய் ஒன்றே உன் யோக்கியதையை என்ன என்று உணர்த்துகிறது. இலங்கைத்தமிழனை கொன்ற இதே புத்தெழிச்சி பாவிகள் மீதி இருப்பதும் ஒரு ... தமிழ் நாட்டில் கள்ளிச்செடிபோல வளர்ந்து தமிழனைக்கொல்லும் கூட்டம்தான் சீமான் + சுடாலின் குடும்பம் .


Kanagaraj M
ஜூன் 11, 2024 10:46

ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை, நிறுவனங்களிடம் காசு வாங்கவில்லை, இயற்கை சார்ந்த விவசாயம், தமிழர்கள் செய்த தியாகத்தை வெளியுலகுக்கு காட்டியது. இது தான் சீமான் செய்த தவறு.


karthik
ஜூன் 11, 2024 08:32

நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்... நீ ஒரு போதும் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது..உனக்கு ஒட்டு போட்ட 8 சதவீதம் மக்களில் விசையின் விசிறிக்குஞ்சுகள் 4 சதவீதம் இருப்பான்.... அடுத்த தேர்தலில் விசை அந்த ஓட்டை தனியா பிரிச்சிட்டு போயிருவான்.. நீயும் விசையும் ஓட்டை பிரிக்கும் வேலையை கன கட்சிதமாக அடுத்த 20 வருஷத்திற்கு செய்வீர்கள்.. இது திராவிட கும்பலுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல வெற்றி கிட்டும்..


P Karthikeyan
ஜூன் 11, 2024 08:22

ஐவரும் இவர் கட்சியும் திமுகவின் B டீம்


Raghavan
ஜூன் 11, 2024 08:12

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று நினைத்து தெலுங்கு, மலையாளம் மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆள் ஆளுக்கு ஒரு கட்சியை வைத்துக்கொண்டு மேன்மேலும் இங்கு உள்ளவர்களை படு முட்டாள்களாக பார்க்கிறார்கள். ஏன் இவர் கேரளா சென்று அங்கு ஒரு நாம் மலையாளி கட்சி ஆரம்பிக்கக்கூடாது?


Ramesh Sargam
ஜூன் 09, 2024 12:42

ரொம்பத்தான் ஆசை. இந்த பேராசைதான் அழிவுக்கு முதல் படி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை