உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சாவடியில் போட்டோ எடுக்க எல்லாரையும் அனுமதிக்க கோரிக்கை

ஓட்டுச்சாவடியில் போட்டோ எடுக்க எல்லாரையும் அனுமதிக்க கோரிக்கை

துாத்துக்குடி:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடும் பிரமுகர்கள், அதிகாரிகளை போட்டோ, வீடியோ எடுப்பது உண்டு. இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.ஆனால், சில ஓட்டுச் சாவடிகளில் முக்கிய பிரமுகர்கள் ஓட்டுப் போடும்போது தனிநபர்கள் கேமரா மூலமும், மொபைல் போன் மூலமும் போட்டோ, வீடியோ எடுக்கும் நிலை உள்ளது. ஆனால், சாமானிய மக்கள் யாரும் ஓட்டுப் போடும் போது போட்டோ எடுக்க பூத் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை.இந்நிலையில், சமூக ஆர்வலரான துாத்துக்குடியில் உள்ள, 'எம்பவர்' அமைப்பு இயக்குனர் சங்கர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:ஓட்டுச்சாவடிக்குள் ஓட்டுப் போடும் முக்கிய பிரமுகர்களை போட்டோ, வீடியோ எடுக்கும் நிலை உள்ளது. ஆனால், சாமானியர்களால் அது இயலாத காரியம். சட்டம் அனைவருக்கும் சமம். எனவே, ஓட்டுச்சாவடிக்குள் வி.ஐ.பி.,கள் ஓட்டு போடும்போது போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது. இது அனைவரும் சமம் என்ற சட்டத்தை மீறும் செயல். இல்லையென்றால், சாமானியர்களும் ஓட்டு போடும்போது போட்டோ எடுக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை