உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணைய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

ஆணைய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சென்னை:தமிழக மனித உரிமை ஆணையத் தலைவராக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மணிக்குமார் உள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டிருந்த, போலீஸ் பாதுகாப்பு, திடீரென வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார். மேலும், தமிழக டி.ஜி.பி.,க்கு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், துணைத் தலைவர் அறிவழகன், செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிய மனு:மாநில மனித உரிமை ஆணையத் தலைவருக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பு, திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பதில், மனித உரிமை ஆணையம், முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமான பிரச்னைகளை கையாள்வதால், பல்வேறு மட்டங்களில் இருந்து எதிர்ப்பும் எழும். எனவே, உரிய பாதுகாப்பு, அவருக்கு வழங்கப்பட வேண்டும். திடீரென, போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றது, துரதிர்ஷ்டவசமானது. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை