உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை ரூ.105 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விவசாயிகளின் நலன் கருதி 2024-25ம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-25ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்று 2,405 ரூபாய்க்கும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்று 2,450 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஜூன் 26, 2024 21:42

அள்ளி அள்ளி கொடுக்கறேன்ல ?? இனிமே யாரும் கள்ளக்குறிச்சி பத்தி பேசப்படாது ..... ஓகேவா ??


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:28

கள்ளக்குறிச்சி சம்பவத்தை மக்கள் மறக்க இப்படி ஒரு அறிவிப்பு.


ராம்கி
ஜூன் 26, 2024 20:15

சூப்பர் அறிவிப்பு தலைவரே. அதிகபட்ச நிவாரணம் குடிப்பவனுக்கே முன்னுரிமை, விவசாயி செத்தாலும்...


S. Narayanan
ஜூன் 26, 2024 20:02

அதில் கட்டிங்போக மீதம் எவ்வளவு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியுமா


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 18:17

போன தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் அடுத்த ஆண்டு நிறைவேற்றுவார்களாம்? தண்ணில எழுதி வெச்சுக்கலாம். குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் ரூபாய்க்கு மூணு படி வரிசையில்தான்...


மேலும் செய்திகள்







புதிய வீடியோ