உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் சம்பவம் : கவர்னர் ரவி மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பி வைப்பு

கள்ளச்சாராயம் சம்பவம் : கவர்னர் ரவி மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலியால், அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம், மரண ஓலங்கள் பார்ப்பவர்களை கலங்கடித்து விட்டன. 'தி.மு.க., அரசின் தோல்வி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் அதிகமாகி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4s8rdcic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தமிழக கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த விஷயம் தொடர்பாக ஒரு ரகசிய அறிக்கை அனுப்பி உள்ளாராம். அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்கப்பட்டு வந்தாலும், மாநில அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.,வினர் எப்படி இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர்; மேலும், அவர்களது விபரங்கள், கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் செயல்பாடுகள் என, அனைத்தையும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாராம் கவர்னர் ரவி.இதனுடன் நிற்காமல், மதுபான ஆலை நடத்தி வரும், தி.மு.க., பிரமுகர்களின் பெயர்கள், அவர்களது நிறுவனங்கள் என, அனைத்து விபரங்களையும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளாராம் ரவி.இன்னொரு பக்கம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இச்சம்பவம் குறித்து விபரமாக கடிதம் எழுதியுள்ளாராம். 'இந்த இரண்டு கடிதங்களில் உள்ள விபரங்களை வைத்து என்ன செய்யலாம்' என, உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்திவருகிறதாம்.மேலும், இது தொடர்பாக, 'சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்கிற மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது; அதையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறதாம்.'இந்த விவகாரத்தில் விரைவில் ஏதாவது நடவடிக்கை டில்லியிலிருந்து நிச்சயம் இருக்கும்' என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SP
ஜூன் 23, 2024 13:43

அறிக்கை அனுப்பி என்ன பிரயோஜனம்? எந்த நடவடிக்கையும் இருக்காது. ஒரு நாள் செய்தி அவ்வளவுதான்.


Alagusundram KULASEKARAN
ஜூன் 23, 2024 13:19

ஆளும் கட்சிக்கு சம்பவம் இருக்கு


SIVA
ஜூன் 23, 2024 12:12

இவரும் மூணு வருஷமா ரகசிய அறிக்கை அனுப்பி கிட்டு தான் இருக்காரு, அவரு அனுப்புற ரகசிய அறிக்கை மேல் நடவடிக்கைகளும் அந்த அறிக்கை மாதிரி ரகசியமா எடுக்கறாங்களா என்ன .....


SIVA
ஜூன் 23, 2024 12:08

கரெக்டாக சொல்ரீங்க எல்லாம் குடிகார பயலுக குடிச்சு குடிச்சு எல்லாம் மறந்து விடுகின்றது ...


venugopal s
ஜூன் 23, 2024 11:11

அப்படிப் பார்த்தால் மத்திய பாஜக அரசு செய்த தவறுகளுக்கு கடந்த பத்து ஆண்டுகளில் பதினைந்து தடவை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்!


அ.சகாயராசு
ஜூன் 23, 2024 10:47

தமிழ்நாட்டின் உணவுகளை ருசிபார்த்துட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்வது போல் ஏன் கள்ளக்குறிச்சி சென்று கவர்னர் அய்யா அவர்கள் விசாரனை செய்யாமல் அறிக்கை அனுப்பாமல் உள்ளது நல்ல கவர்னருக்கு அழகா


Mohamed Raffi
ஜூன் 23, 2024 09:38

மைனாரிட்டி அரசு, நீட் தேர்வில் கோல் மால் செய்ததை, மக்கள் மறப்பார்களா?


Ananthanarayanan Aa
ஜூன் 23, 2024 09:31

முட்டாளுங்க எப்போதும் திருந்தியதாக சரித்திரம் இல்லை. நீ எப்பவும் போல அடிவருடி கொண்டே இரு. நல்லா உருப்பிடுவாய். நாட்டின் துரோகிகள் நீங்கள் தான்.


Vijay
ஜூன் 23, 2024 11:09

திமுக என்றும் மாறாது, மக்கள் மாற வேண்டும், மீண்டும் நிறைய பிரச்சனைகள் நடக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்


ram
ஜூன் 23, 2024 05:08

ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு நாட்டை சுரண்டும் திருட்டு கூட்டத்துக்கு ஓட்டு போடும் நாசமாப் போகும் மக்கள் திருந்தாத வரைக்கும் இந்த திருட்டுக்கூட்டத்தின் நாசகர வேலைகள் நடந்துட்டே தான் இருக்கும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 23, 2024 02:23

மது விலக்கு அமுலில் இருத்த அந்த காலத்திலேயே கள்ள சாராயம் இருந்தது. மரணங்களும் உண்டு. அரசின் சட்டங்களை விட தனி மனித ஒழுக்கம் முக்கியம். ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் எல்லாவிதமான குற்றங்களும் நடக்கதான் செய்கின்றன.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ