உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை : ரம்ஜான் மற்றும் தேர்தல் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பாக்கி உள்ள இரண்டு தேர்வுகள், இன்றும், நாளையும் நடத்தப்படுகின்றன.தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மற்ற வகுப்புகளில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பல்வேறு பாடங்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கள் முடிந்து விட்டன.கடந்த 8ம் தேதியுடன் முதற்கட்ட தேர்வுகள் முடிந்தன. தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான் பண்டிகை, தமிழ் ஆண்டு பிறப்பு, தேர்தல் மற்றும் அதன் முன்னேற்பாடு பணிகள், ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சிகள் ஆகியவற்றுக்காகவும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படு கின்றன. நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாக்கி உள்ள இரண்டு தேர்வுகள், இன்றும், நாளையும் நடக்கின்றன. இந்த தேர்வுகள் முடிந்ததும், வரும் 24ம் தேதி முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ