மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : உலகின் ஒல்லியான கார்
09-Jul-2025
அறிவியல் ஆயிரம்: கடலில் மூழ்கும் நகரங்கள்
27-May-2025
கண்டவர்களை எல்லாம் கடுப்படிக்கும் அதிகாரி!
09-Sep-2024
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
30-Apr-2024
அறிவியல் ஆயிரம்நிறம் மாறாத பனிக்கட்டிதண்ணீருக்கு தனியாக நிறம் இல்லை. ஆனால் தண்ணீர்உறைந்து உருவாகும் பனிக்கட்டி வெள்ளையாக இருக்கிறது. ஏராளமான பனிப் படிகங்களின் (ஐஸ் கிரிஸ்டல்) இணைப்பே பனிக்கட்டி. இதன் இடையே உள்ள நுண்ணிய குமிழ்களின் இடைவெளியில் காற்று நிரம்பிஇருக்கும். இந்தப் படிகக் குவியல் மீது ஒளிக் கதிர்கள் விழும்போது, அவை வளைந்து போவதுடன் எதிரொளிக்கவும் செய்கின்றன. எல்லாப் படிகங்களும் ஒளிக்கதிர்களை ஒரே திசையில் இல்லாமல் பல்வேறு திசைகளில் எதிரொளிக்கின்றன. சிதறிய இந்த ஒளி பனிக்கட்டியை வெள்ளை நிறமாகத் தோன்றச் செய்கிறது.தகவல் சுரங்கம்முட்டாள்கள் தினம்ஜூலியன் காலண்டரில் ஏப்.1 தான் புத்தாண்டு. பின் 13ம் போப் கிரிகோரி 1582ல் புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இதில் ஜன.1 புத்தாண்டாக மாற்றப்பட்டது. இதை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை பயன்படுத்த துவங்கின. 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை கிண்டல் செய்வதற்காக 'ஏப்.1ல் முட்டாள்கள் தினம்' அறிமுகமானது. பின் பெரும்பாலான நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
09-Jul-2025
27-May-2025
09-Sep-2024
30-Apr-2024