உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில், ஒரு இடத்திலும் வெற்றி பெறாத நிலையிலும், 8.09 சதவீத ஓட்டுகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற உள்ளது.அரசியல் கட்சிகள், 'மாநில கட்சி' என்ற தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற, லோக்சபா தேர்தலாக இருந்தால், ஒவ்வொரு 25 தொகுதிக்கு ஒன்று வீதத்தில், தமிழகத்தில் குறைந்தது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத ஓட்டுகளைப் பெற வேண்டும்.அந்த வகையில், இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற உள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், 8.09 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ள, நாம் தமிழர் கட்சியும், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற உள்ளது.அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு, தனிப்பட்ட சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னத்தை, மற்ற கட்சிகள் பயன்படுத்த இயலாது. அக்கட்சி களுக்கு வேட்பாளர் பட்டியல் கட்டணமின்றி வழங்கப்படும். கட்சி வேட்பாளரை, ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும். தேர்தல் பிரசாரத்திற்கு 40 நட்சத்திர வேட்பாளர்களை பயன்படுத்தி, அவர்களின் போக்குவரத்து செலவிற்கு விலக்கு பெறலாம்.தேர்தல் கமிஷன் ஆலோசனைக் கூட்டத்திற்கு, அக்கட்சியின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில், தேர்தல் பிரசாரம் செய்ய, அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ள நிலையிலும், நாம் தமிழர் கட்சிக்கு, மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.நாம் தமிழர் கட்சி, 2016 சட்டசபை தேர்தல் முதல் தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சிக்கு, 8.22 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.சிவகங்கையில் 15.5, நாகப்பட்டினத்தில் 13.4, தென்காசியில் 12.5, துாத்துக்குடியில், 12.2, தஞ்சாவூரில் 11.6, திருச்சியில் 10.1, பெரம்பலுாரில் 10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் கமிஷனின், மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. அதே நேரத்தில், அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு, நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பல தொகுதிகளில், நான்காவது இடம்தான் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

karupanasamy
ஜூன் 06, 2024 11:33

அடுத்த தேர்தலில் சீமான்பயலை எதிர்த்து விஜயலக்ஷ்மி நிற்கப்போவதாக செய்திகள் வருகின்றது சீமான் கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.


sankar
ஜூன் 06, 2024 10:39

தீயசக்திக்கு அங்கீகாரம் நல்லதல்ல


Ramanujadasan
ஜூன் 06, 2024 10:28

ஏற்கனவே சீமான் ஆடும் ஆட்டம் குரங்கை விட மட்டம் , இதில் இந்த தேர்தலில் ஓட்டுகள் சிறிது கூட வாங்கி விட்டார் . இனி மேல் அவ்வளவு தான் . இவரை கையிலே பிடிக்க முடியாத அளவு ஆட்டம் போடுவார்


Sampath Kumar
ஜூன் 06, 2024 08:58

தமிழ் நாட்டில் உண்மையிலே வளர்ந்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சிதான் பிஜேபி எல்லாம் இல்லை அவர்கள் கூட்டு சேர்ந்து வாங்கி வோட் சதவிகிதம் 10.19 மட்டுமே இதில் கூட்டணி காட்சிகளை வோட் விகிதத்தில் காலிதளம் வரும் 6.5 சதவிகிதமே இதை பற்றி பேசமாட்டானுக என்னமோ இவனுக்கு கட்சிதான் 3 வைத்து ஏதம் என்று பொய் ஒல்லி கொண்டு மக்களை ஏமாற்றுவார்கள் அதுக்கு தாண்டா மக்கள் உங்க பிஜேபி கு பெரும்பான்மை இல்லமல் செய்து விட்டார்கள் இன்னும் உள்ளறிக்கிட்டு தெரியாமல் நடந்துக்கோ


வாய்மையே வெல்லும்
ஜூன் 06, 2024 10:00

திருட்டு திராவிடம் என்றைக்கு ஒழிகிறது என்றால் அன்று தான் மானமுள்ள தமிழனுக்கு வாழ்வு. சாராய அரசு எங்களுக்கு வேண்டாம் . தில்லுமுல்லு ஆட்களும் வேணாம்,, ஆனால் எங்களுக்கு வேணும் நேர்மையானவர்கள் அவர்கள் செய்யும் அரசியல் .அது பாஜக இடம் தான் உள்ளது .


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2024 06:40

அங்கிகாரம் கிடைச்சி என்ன பிரோசனம் பி ஜே பி யின் மொத்த ஓட்டு விபரம் தெரிஞ்ச உடனே கட்சியை கலைத்துவிட்டு போகிறேன் என்று சொன்ன படி நடந்து கொள். உன் தும்பிகளும் ஓடி விட்டார்கள்.


Vathsan
ஜூன் 06, 2024 11:42

கூட்டணி கட்சி தயவில் வாங்கிய வோட்டு அண்ணாமலை வாங்கிய வோட்டு. உண்மையான சிங்கம் சீமான் தான். தைரியம் இருந்தால் மாநிலத்தில் அண்ணாமலை தனியாக நின்று இருக்கலாமே. மத்தியில் கூட நிதிஷ் நாயுடு கூட மினாரிட்டி கூட்டணி அரசு.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூன் 06, 2024 06:30

இந்த சீமான் கடைசிவரை ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கப் போவதில்லை திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை கணிசமான அளவு பிரித்து திமுக வெற்றி பெற உதவுகிறான். மூளை வளர்ச்சி அடையாத நாம் தமிழர் கட்சியின் தற்குறித் தம்பிகளுக்கு (தற்குறி என்ற வார்த்தையை விட ஜோம்பிக்கள் என்பது பொருத்தமாக இருக்கும்) மூளை எப்போது வளர்ச்சி அடைகிறதோ (அதற்கு வாய்ப்பில்லை) அதுவரை சீமானின் இந்த அரசியல் சித்து விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


Kasimani Baskaran
ஜூன் 06, 2024 06:13

தீம்க்கா தயாரித்து வெளியிட்ட ஒரு கட்சி. இன்று அங்கீகாரம் பெறுகிறது. நாம் திராவிடர் என்று ஒரு கட்சியை ஆரபித்தால் அமோகமாக அணைத்து அநாதை திராவிடர்களும் வந்து சேர்ந்து கொள்வார்கள்.. தீம்க்காவுக்கே டப் கொடுக்கலாம்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ