உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் கூட்டணியை மறுக்கிறார் சீமான்: தனித்துவத்தை இழந்து விடுவோம் என அச்சம்

தேர்தல் கூட்டணியை மறுக்கிறார் சீமான்: தனித்துவத்தை இழந்து விடுவோம் என அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டார் என கூற முடியாது. கூட்டணி சேர்ந்தால் தனித்துவத்தை இழந்து விடுவோம். என் கருத்தை ஏற்று வருவோருடன் கூட்டணி அமைக்கலாம்,” என, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j6gor9t0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டு நாட்களுக்கு முன், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். நான் பாடிய பாட்டைதான், அவர் பாடினார். அந்த பாட்டுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த பாட்டை எழுதி, இசை அமைத்து வெளியிட்டது, அ.தி.மு.க., தான். ஜெயலலிதா இருக்கும்போது நுாற்றுக்கணக்கான மேடையில், இந்த பாடல் பாடப்பட்டது.அப்போது இவர்களுக்கு வருத்தம், கோபம் ஏற்படவில்லை. நாங்கள் பாடும்போது வருத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும், கருணாநிதி பேசியது எல்லாம் அழியாமல் உள்ளது. இழிவாக பேசுவதற்கென பேச்சாளர்களை வைத்திருந்தனர். நாகரிக அரசியல் குறித்து கற்றுக் கொடுக்க, துளியும் தகுதி இல்லாத கட்சி தி.மு.க., தான். அவர்கள் எங்களை கேவலமாகப் பேசும்போது இனிக்கிறது. நாங்கள் பேசினால் நெஞ்சு புண்ணாகிறது. நான் கருணாநிதி குறித்து பேசினேன்.கருணாநிதி எழுதியதற்கு ஸ்டாலின் வருந்துவதாகக் கூறினால், நாங்களும் வருந்துகிறோம்.ஜெயலலிதா இருக்கும்போதே கூட்டணிக்கு அழைத்தார். கூட்டணி என்பது என் கோட்பாடு இல்லை. திராவிட கட்சிகளோடு ஒரு நாளும் கூட்டணியாக இருக்க முடியாது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால், அந்த கட்சிகளோடு எப்படி கூட்டணி வைக்க முடியும்? மாற்று என வந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்ததால், ஓட்டு சதவீதம் சரிந்தது.கூட்டணி சேர்ந்தால் தனித்துவத்தை இழந்து விடுவோம். என் கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒத்தக் கருத்துடையோர் எங்களுடன் வந்தால், அவர்களுடன் கூட்டணி அமைக்கலாம். விஜய் களத்திற்கு வரும்போது தான் ஒருமித்த கருத்து உள்ளதா என்பதைக் கூற முடியும்.சனாதன எதிர்ப்பை தி.மு.க.,விலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டதாக கூற முடியாது. சீமச்சாராய கடையை ஒழித்துவிட்டு, கள்ளுக்கடையை திறப்பது நல்லதுதான்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஜூலை 14, 2024 14:23

தனியா நின்னு உதை வாங்கி தனித்தன்மையோடு நில்லுங்க.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 13:00

ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டார் என கூற முடியாது ...... நீங்கள் குறிப்பிடும் நபர் இருந்த பொழுதும் புனிதராகத்தான் கருதப்பட்டார் .....


Ambedkumar
ஜூலை 14, 2024 09:39

இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவர்களை தேர்தலில் நிற்கவைத்து, டெபாசிட் இழக்க வைத்து அவர்களை ஒரு வகையில் தர்மசங்கடத்துக்குள்ளாக்குவதாகவே தெரிகிறது.


Shekar
ஜூலை 14, 2024 10:40

தர்மசங்கடம் இல்லை, அவர்கள் சேமிப்பை கரைத்து போண்டி ஆக்கி நடுத்தெருவில் விடுகிறார் இந்த சைமன்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 14, 2024 11:13

ஆமாம் திருமாவளவனைப்போல், ராமதாசைபோல் இந்த திராவிட திருட்டு கட்சிகளுடன் இரண்டு சீட்டுக்கு 4 சீட்டுக்கு விலை போவதைவிட. தோற்பதே மேல்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூலை 14, 2024 07:57

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இப்போது நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரை வெற்றி என்பதே சாத்தியம் அல்ல என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் நிரூபித்து கொண்டே வருகிறார்கள் அதை உணர்ந்து கொண்டாலும் இந்த சீமான் யாருடனும் கூட்டணி சேராமல் எதற்கு தனியாக நின்று தன் கட்சி தொண்டர்களை பலி கொடுக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது!


kantharvan
ஜூலை 14, 2024 09:04

கட்ட துறைக்கு தெரிஞ்சது கைப்புள்ளைக்கு தெரில ...தும்பி புள்ளி ங்கோ பலி அண்ணனுக்கு என்ன


SUBBU,MADURAI
ஜூலை 14, 2024 07:25

இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் யாருடனும் கூட்டணி சேராமல் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காணும்.நாம் தமிழர் கட்சிக்கு தற்குறித் தம்பிகளும் அவர்கள் வசூலித்து தரும் பெரும் திரள் நிதியும் இருக்கும் போது எத்தனை முறை டெபாசிட் போனாலும் எனக்கென்ன கவலை? கட்டுத் தொகையாவது கூட்டுத் தொகையாவதுன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு காலரை தூக்கி விட்டு போய்கிட்டே இருப்பேன்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 14, 2024 07:17

உன்னையும் நம்பி வர்றவங்களையும் பிச்சை எடுக்க வைப்பது உன் கொள்கையா. அவர்களாகவே ஓடிவிடனும், அப்படிதானே.


ராமகிருஷ்ணன்
ஜூலை 14, 2024 07:13

உன்னை யாரும் கூட்டணிக்கு சேர்க்க மாட்டார்கள். பயம்தான் காரணம். மீறி உன்னுடன் பேசினால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்.


இறைவி
ஜூலை 14, 2024 06:33

சீமான் கட்சி நடத்தும் நோக்கமே தீயமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதுதான். தீயமுக கொள்ளை அடித்த பணத்தை கொடுத்து ஒரு கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டு அறுவடை செய்கிறது. அதற்கு எதிராக பலமான கூட்டணி அமைந்தால் தீயமுகவிற்கு பிரச்சனை. அதனால் பின் புலத்தில் பெரும் நிதி உதவி செய்து சீமான் போன்றவர்களை கட்சி நடத்த விட்டு எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். இல்லாவிட்டால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று தெரிந்தும் இத்தனை வருடங்களாக சீமானால் கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறது. பின் புலத்தில் தீயமுக இருக்கிறது. ஆனால் பொது மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் சீமான் தீயமுகவை விமர்சித்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இந்த மாதிரி செட்டப்தான் கமலஹாசனின் மக்கள் நீதி மையமும். ஒட்டு பிரிக்கும் சதி. விஜய் அரசியலுக்கு வருவதும் தீயமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கத்தான். இந்த சதியில் அஇஅதிமுக எடப்பாடியும் விழுந்து எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்துள்ளார். ஆனால் ரஜனிகாந்த் இந்த வழியில் வராததால் அவர் கட்சிக்குள்ளேயே இவர்களின் ஐந்தாம் படை ஆட்களை அனுப்பி அவரை கும்பிடு போட்டு அரசியலை விட்டே ஓட வைத்து விட்டார்கள். தீயமுகவின் அரசியல் என்பது கொள்ளை அடிப்பது, மக்களை குடிகாரர்களாக, பணத்திற்காக கை ஏந்துபவர்களாக வைத்திருப்பது, கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதியை ஓட்டுக்காக கொடுத்து மீண்டும் பதவிக்கு வருவது. இம்மாதிரி குட்டி கட்சிகளை ஆரம்பிக்க விட்டு எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பது. தமிழகத்தை காக்க இறைவன்தான் வழி காட்ட வேண்டும்.


karupanasamy
ஜூலை 14, 2024 06:18

... கூட்டத்துல இருக்கும்போது நீ பேசுன நாகரீக பேச்சுக்களுக்கு மண்டியிட்டு மன்னிப்பு மன்னிப்பு கேலுல


மோகனசுந்தரம்
ஜூலை 14, 2024 06:12

அண்ணன், தினமலர் போன்ற பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வருவது அவருடைய அபரிதமான வளர்ச்சியை காண்பிக்கிறது. எனினும் ஆமை யனின் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ள மனது வரவில்லை


மேலும் செய்திகள்





புதிய வீடியோ