உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் : ஆனால் ஒரு தடவை கூட டேஸ்ட் பார்த்ததில்லை: கண்ணுகுட்டி வாக்குமூலம்

கள்ளச்சாராயம் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் : ஆனால் ஒரு தடவை கூட டேஸ்ட் பார்த்ததில்லை: கண்ணுகுட்டி வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கண்ணுகுட்டி 25 ஆண்டு விற்பனை அனுபவம் இருந்தாலும் கள்ளச்சாராயத்தை நான் டேஸ்ட் பார்த்ததில்லை என போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தாக 185 பேரில் 135 பேர்கள் பல்வேறு நகரத்தின் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 85 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 27 பேர் பலியாகி உள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். சேலம் மருத்துவமனையில் 21 பேர் சிகிச்சைபெற்று வரும்நிலையில் 16 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதன் அடிப்படையில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டியது.இதனிடையே கள்ளச்சாரயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ் , அவரது மனைவி விஜயா, கண்ணுகுட்டி தம்பி தாமோதரன் உள்ளிட்ட எட்டு பேர் வரையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசார் விசாரணையில் தன் மீது ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும் ஒரு சொட்டு சாராயம் கூட குடித்தது இல்லை டேஸ்ட் பார்ப்பது எல்லாம் தம்பி தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இருவர் கைது

கள்ளச்சாராய உயிரிழப்புக்கள் தொடர்பாக மரக்காணம் மதன்குமார், கள்ளக்குறிச்சி ரங்கநாதபுரத்தை சேர்ந்த சகுந்தலா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆகி அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Vijayakumar Kaliyaperumal
ஜூன் 27, 2024 02:59

கண்ணு குட்டிக்கு ஒரு அமைச்சர் ஆக எல்லா விதமான தகுதிகளும் உள்ளது கணம் பொருந்திய நீதிபதி அவர்களே... மற்ற ஒன்றுமில்லாத உப்பு சப்பில்லாத விடயதிர்க்கெல்லாம் தானாக முன்வந்து கேள்வி கேட்க்கும் நீதிமன்றம் உறங்கி கொண்டு உள்ளதா?


spr
ஜூன் 25, 2024 11:24

"போலீசார் விசாரணையில் தன் மீது ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும் அவர் சொன்ன போதும் அவரை இதுவரையில் காவற்துறை ஏன் ஒரு முறை கூட தண்டிக்க வழி செய்யவில்லை என்றால் அவர்களும் மறைமுகமாக கள்ளச்சாராயம் விற்பதில் ஈடுபட்டுள்ளதுதான் என்பது உலகறிந்த செய்தியே இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டாம் காவற்துறையை தனது பொறுப்பிலிருந்து எடுத்து வேறொருவருக்கு கொடுத்து விடலாம்


SRINIVASAN
ஜூன் 24, 2024 22:06

நிர்வாத்துக்கு துணிச்சல் இருந்தால் கண்ணுக்குட்டியை பொதுவெளியில் பேசவிடுங்களேன். யார் யார்க்கு எப்போது எவ்வளவு பணத்தை இரைத்திருப்பார். இதில் மீடியாக்களுக்கும் பங்குண்டு ..மொத்தத்தில் கேடுகெட்ட அரசு நிர்வாகம்.இந்த நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனம்


JeevaKiran
ஜூன் 24, 2024 13:11

அதெப்படி குடிப்பான். குடித்தான் சாவான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்


MADHAVA NANDAN
ஜூன் 24, 2024 08:36

அப்போ அணைத்து கட்சி தலைவர்களும் அத்துப்படி இவருக்கு பல முதலமைச்சர்கள் ஆட்சியையும் பயன்படுத்தியிருக்குகிறார், கால் நூற்றாண்டு சாம்ராஜ்யம், எத்தனை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் காலாவணிகளை பார்த்திருப்பார் யோசியுங்கள்


தமிழன்
ஜூன் 22, 2024 20:30

25 ஆண்டுகளில் சம்பாதித்தது எவ்வளவு...? மாமூல் கொடுத்தது எவ்வளவு..? கமிஷன் கொடுத்தது எவ்வளவு..? தேர்தல் போது அந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று இலவசமாக கொடுத்தது எவ்வளவு..?


D.Ambujavalli
ஜூன் 22, 2024 09:12

குரங்கு குட்டியை விட்டு வசம் பார்ப்பது போல இந்த வாக்குமூலம் இருக்கிறது ?


D.Ambujavalli
ஜூன் 22, 2024 09:07

இந்த lot சாராயத்தை மட்டும் தம்பி டேஸ்ட் பார்க்காமல் விற்பனைக்கு அனுப்பிவிட்டானோ அந்த கன்னுக்குட்டி ? அல்லது 'சேர்மானம்' விதம் தெரிந்து அந்தத் தம்பி தப்பி விட்டானா ?


N Sasikumar Yadhav
ஜூன் 22, 2024 02:03

திருட்டு திராவிட மாடல் அரசு நீதிமன்றம் காவல்துறை என அனைவரும் குற்றவாளிகள் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்ணுக்குட்டிமீது . ஒட்டுமொத்த அரசும் ஈரல் கெட்டுப்போய் துர்நாத்தம் அடிக்குது


theruvasagan
ஜூன் 22, 2024 00:19

பிடிபட்டவன் இப்படியும் பேசலாம். தண்ணித் தொட்டி திறந்து விட்ட கணணு குட்டி நான். தாகமெடுத்தவர்கள் தாகசாந்தி செய்து கொள்ள ஒரு வாய்பு உருவாக்கிக் கொடுத்தது ஒரு தப்பா. மடியல் ஆட்சியில் சுய தொழில் செய்து முன்னேற கிடைத்த சிறந்த வாய்ப்பு இதுதான். அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். இந்த சம்பவம் மாத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் வட்டம் மாவட்டம் என்று முன்னேறி எங்கேயோ போயிருப்பேன்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ