உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பாக விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தது.அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், ‛‛சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார். வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட்டிப்பு

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு அடைந்தது. இந்நிலையில், 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

spr
ஏப் 26, 2024 18:54

சிறைக்குள் இருக்கும்வரை ஓரளவு பாதுகாப்பு அண்ணா நகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாட்ஷா தற்கொலை பின்னணி என்ன ? அறியாதவரா? ஏற்கனவே முட்டாள்தனமாக அறுவை சிகித்சை செய்து உடல் வலு குன்றியிருக்கிறது கெஜ்ரி போல நீரிழிவு நோய் என்று கூறியிருந்தால் தப்பித்திருக்கலாமோ என்னவோ? இப்போது ஒருவேளை திஹார் சிறைக்குச் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூட நினைக்கலாம் முதலில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லையென்று சட்டத்தைக் காக்கச் சபதம் எடுத்த நீதிமன்றம் சொல்லாது சொன்னால் நிலைமை சரியாகும்


Lion Drsekar
ஏப் 26, 2024 12:50

உண்மையைக் கண்டறியும் கருவியை எதற்க்காக வைத்திருக்கிறார்கள் ? எல்லோருக்குமே இந்த கருவியை பயன்படுத்தினால், சாட்சி, பொய்சாட்சி, எதுவுமே தேவை இல்லை, விசாரணையில் உள்ள எல்லா வழக்குகளும் உடனடியாக தீர்த்து வைக்கவும் முடியும் வந்தே மாதரம்


ஆதிசிங்
ஏப் 26, 2024 11:41

குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. விசாரணைக்கு எவன் ஒத்துழைச்சு இவிங்க நினைக்கற பதிலை சொல்லுவான்? வர வர தொப்பை அதிகாரிகளுக்கு சாக்கு போக்கு சொல்றதே வேலையாப் போச்சு. இருக்குற ஆதாரங்களை வெச்சு வழக்குப் போடுங்க. இல்லேன்னா வெளியே உடுங்க.


karunamoorthi Karuna
ஏப் 26, 2024 08:31

பல் பிடுங்கி விசாரணை செய்த மாதிரி இவனுடைய பல் நகங்களை பிடுங்கி விசாரணை செய்தால் ஒத்துழைப்பு கொடுப்பான்


panneer selvam
ஏப் 26, 2024 00:40

It is a standard technic , Chentil Balaji will give standard evasive response like " I do not know , I am not aware of it , I do not remember ,I do not have any knowledge, i am not involved " etc to any questions poised by ED


Sathya
ஏப் 25, 2024 23:31

Take him to Thihar, issue will be resolved


Barakat Ali
ஏப் 25, 2024 21:54

ஆ ராசா குறித்து செந்தில் பாலாஜி என்ன நினைப்பார் ????


Dharmavaan
ஏப் 25, 2024 21:48

ஏன் இன்னும் திஹார் ஜெயிலுக்கு எடுத்துக்கொண்டு போகாமலிருக்கிறது அமலாக்கத்துறை


Kasimani Baskaran
ஏப் 25, 2024 21:27

வேலை வாங்கித்தருகிறேன் என்று பணம் வாங்கினால் தவிர பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆகவே குற்றவாளி என்று அனைவருக்கும் தெரியும் இது இத்துப்போன நீதிமன்றத்துக்கு தெரியவில்லை என்பது துரதிஷ்ட வசமானது


திராவிட மாடல் மனித நேய மாடல்
ஏப் 25, 2024 20:11

சிரிப்பு போலீஸ் ஐ சிறையில் இருந்து கொண்டே ஊஞ்சல் ஆடவிட்டவர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை