உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாவம், புண்ணியம் கருத்தில் நம்பிக்கை நீதிபதி உருக்கமான கடிதம்

பாவம், புண்ணியம் கருத்தில் நம்பிக்கை நீதிபதி உருக்கமான கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட சிறந்த வழக்கறிஞராக இருப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். பாவம், புண்ணியம் என்ற கருத்தை நம்புகிறேன்.'உங்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டால், நான் தவறான தீர்ப்பை வழங்கினால், என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவரது கடிதம்:நான் நீதிபதியாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இக்காலம் முழுதும் மதுரை கிளையில் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம். முன்னாள் நீதிபதி கே.சந்துரு, 95,607 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். அவர் ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் பணியாற்றினார். நான், 1 லட்சத்து 3,685 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன்.மீதமுள்ள ஆறு ஆண்டுகளை நான் எப்படி செலவிடப் போகிறேன் என்பதில் எனக்கு சில கனவுகள் உள்ளன.நிச்சயமாக, எதுவும் நம் கையில் இல்லை. எங்களில் ஒருவரான நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உடல்நலக் குறைவால் சிகிச்சையில் உள்ளார்.அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை அறிந்திருந்தாலும், நாம் இன்னும் திட்டமிடுகிறோம். அதற்கு நான் விதிவிலக்காக இருக்க முடியாது.ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வழக்கறிஞரையும் சந்தேகத்துடன் பார்க்க நான் விரும்பவில்லை. அது என் குணத்தை சிதைத்துவிடுமோ என கருதுகிறேன். வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு முன் முழுமையாக சரிபார்க்க வேண்டும்.ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் என்னை ஏமாற்றினால், எனக்கு நெருக்கமான சில நீதிபதிகளிடம் கருத்துக் கூறவோ அல்லது புகார் செய்யவோ கடமைப்பட்டிருக்கிறேன். நான் தவறான தீர்ப்பை வழங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, சிறந்த வழக்கறிஞராக இருப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். பாவம், புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன்.உங்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டால், நான் தவறான தீர்ப்பை வழங்கினால், என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்.நீதிபதியின் கோபம் தற்காலிகமானது மட்டுமே. அது வழக்கின் முடிவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.கணவன் - மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டாலும் அது விவாகரத்திற்கு வழிவகுக்காது. என் நீதிமன்றத்தில், ஒரு இளம் வழக்கறிஞரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டேன்.இது என் சொந்த நிலைப்பாட்டின்படி இருந்தது. நான் அவரை அழைத்து எனது தனி அறையில் வைத்து வருத்தம் தெரிவித்தேன்.அவர் சிரித்துவிட்டு, 'தயவுசெய்து என்னை மேலும் திட்டுங்கள்; ஏனெனில் நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல உத்தரவை வழங்குவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்' என்றார்.நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுடன், என் எட்டாவது ஆண்டு பணியில் நுழைகிறேன்.இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
ஜூன் 30, 2024 10:45

பாவ புண்ணிய கர்மாக்கள் அறம் நீதி இவற்றில் இவருக்கு உள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை நேர்மை மீதான பிடிப்பு, திராவிட ஆட்சியாளர்கள் தலைவர்கள் திராவிட வாக்காளர் கும்பலுக்கு அறவே இல்லை..ஆகவே, கள்ள சாராயம் கள்ள உறவு கொலை கொள்ளை வழிப்பறி என சீரோடும் சிறப்போடும் நாறிப் போய் கள்ள சாராய சாவுக்கு ரூபாய் பத்து லட்சம் போதாது என புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்


kantharvan
ஜூலை 02, 2024 16:35

புலம்புவதும் அலம்புவதும் நீர்தான் ??


Sun
ஜூன் 30, 2024 09:19

சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்த நிறைய மனம் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு. தங்கள் சேவை நாட்டுக்கு தேவை.


R.RAMACHANDRAN
ஜூன் 30, 2024 07:37

கே.சந்துரு 95,607 வழக்குகள் தீர்த்து வைத்ததாக பெறுபட்டுக் கொள்கின்றனர்.அவரது தீர்ப்புகளில் பல அவரது விருப்பு வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமைகளை பறிப்பவைகளாகவும் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் நேர்மையானவர்களை ஒடுக்குவதாகவும் உள்ளன.


kantharvan
ஜூலை 02, 2024 16:36

அது சந்துரு அல்ல ஜி ஆர் ஸ்வாமிநாதன்


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:31

நீதிபதிக்கு பொய்யை அடையாளம் காணும் பொறுப்பு இருக்கிறது. அதில் இவர் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆண்டவனின் அனுகிரஹமும் பணி சிறக்க பிரார்த்தனைகள்.


kantharvan
ஜூலை 02, 2024 16:34

ஆக உண்மை உறுதியாகிறது


sridhar
ஜூன் 30, 2024 07:13

May your tribe increase and cleanse the judiciary


Karthik
ஜூன் 30, 2024 06:47

நீதி அரசர் சந்துரு அளவு இவர் இங்கு கொண்டாட படுவார் என்பது 100% நிச்சயம் இல்லை, சிறந்த வழக்கறிகர் இருக்கட்டும், சிறந்த நீதி அரசருக்கு இந்தியாவில் தட்டுப்பாடு உள்ளது. முயற்சி திருவினை ஆக்கும் ...பதவியில் இருக்கும் ஒரு நீதியரசர் தன்னை முன்னிறுத்துவது அருவறுப்பாக அவருக்கே பின்னாட்களில் தோன்றலாம்


SWAMINATHAN
ஜூன் 30, 2024 06:21

வாழ்க பல்லாண்டு நலமுடன்


kantharvan
ஜூன் 30, 2024 06:15

எந்த மனைவியும் தான் பத்தினி என்று கடிதம் எழுதுவதில்லை. ஆனால் சில பர..கல் இதுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் கூட எடுத்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுவார்கள். ஆனால் உண்மை என்ன என்று உலகத்திற்கே தெரியும் .


sankaranarayanan
ஜூன் 30, 2024 06:01

இப்படிப்பட்ட நீதி அரசர்கள் நம் நாட்டிற்கு இத்தருணத்தில் மக்களின் தேவைகளுக்கு அநேகம் பேர்கள் தேவை தேவை


Chand
ஜூன் 30, 2024 04:22

வணக்கம் அய்யா . மிக சிறந்த நீதி அரசர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை