உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சி வந்தாலே மணல் கடத்தல்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சி வந்தாலே மணல் கடத்தல்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சி வந்தாலே மணல் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் பொது சொத்துக்கள் களவாடப்படுவது வாடிக்கையான ஒன்று என அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மணல் கடத்துபவர்கள் பற்றி துப்புக் கொடுப்பவர்களையும், மணல் கடத்தலை தடுக்கும் வருவாய் மற்றும் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. திமுக ஆட்சி வந்தாலே மணல் கடத்தல், கிராவல் மண் போன்ற கனிம வளங்கள் கடத்தல், பொது சொத்துக்கள் களவாடப்படுவது வாடிக்கையான ஒன்று.

கைகட்டி வேடிக்கை

ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை ஆளும் கட்சி நிர்வாகி ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியது. தமிழகம் முழுவதும் இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதும், இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

கண்டனம்

இதன் உச்சமாக இரு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை - இலுப்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, இதுபோன்ற செய்திகளை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் முனைப்பு காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhakumar Srinivasalu
ஜூன் 17, 2024 20:20

இவர்கள் ஆட்சியில் எந்த கடத்தலும் (கஞ்சா உட்பட எதுவும்) நடக்க வில்லை என்று இவர் சத்தியம் செய்வாரா? என்னா இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் ஆட்சியில் தானே?


P. VENKATESH RAJA
ஜூன் 17, 2024 19:54

திமுக ஆட்சியில் அராஜக போக்கு அதிகரித்து வருகிறது


naranan
ஜூன் 17, 2024 19:39

இப்போது தான் ஞாபகத்துக்கு வந்ததோ உங்களுக்கு? சிறுபான்மையினர் வாக்குகளைக் கைப்பற்றும் வெறியில் யார் உண்மையான எதிரி என்று அடையாளம் காண முடியாது, நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தோல்வியடைந்தது பொருத்தமே. ஒரு லெட்டர் பேடு கட்சிக்குக் கூடத் தலைவனாகும் தகுதி உமக்கில்லை. நீர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதே நலம்.


ramesh
ஜூன் 17, 2024 19:21

அப்போ உங்கள் ஆட்சியில் கடத்த வில்லையா ?.எல்லா கட்சி அரசியல் வாதிகளும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ