உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூவத்தில் கொட்டப்பட்ட மண், கட்டட கழிவுகள்: அகற்ற ரூ.50 கோடி கேட்கிறது நீர்வளத்துறை

கூவத்தில் கொட்டப்பட்ட மண், கட்டட கழிவுகள்: அகற்ற ரூ.50 கோடி கேட்கிறது நீர்வளத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூவம் ஆற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த நிறுவனம் கொட்டிய மண் மற்றும் கட்டட இடிபாடுகளை அகற்ற, அந்நிறுவனத்திடம் நீர்வளத்துறை 50 கோடி ரூபாய் கேட்டு உள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

மாசடைந்துள்ளது

இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு ஆகியவற்றில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், கூவம், பகிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது. இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, நீர்வளம், சுற்றுச்சூழல், வருவாய், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சென்னை நிரந்தர வெள்ள தடுப்பு அறக்கட்டளை, அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது.இதன் வாயிலாக, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணிகள் படிப்படியாக செய்யப்பட்டு வந்தன. சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்புக்கு இடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதனால், அங்கு ஆக்கிரமிப்புகள் முழுமையாக தடுக்கப்பட்டு, கூவம் ஆறு அகன்று விரிந்துள்ளது. ஆனாலும், கழிவுநீர் கலப்பு தொடர்ந்து வருகிறது. கழிவுநீரில் குப்பை உள்ளிட்டவை அடித்து செல்லாத வகையில், சிந்தாதிரிபேட்டையில் ஆற்றின் குறுக்கே வலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ச்சியான பணிகளுக்கு, தி.மு.க., ஆட்சியில் இன்னும் நிதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச் சாலை திட்டத்திற்காக, கூவத்தில் துாண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நீரோட்டம் பாதிப்பு

இப்பணியை, மும்பையைச் சேர்ந்த ஜே.குமார் என்ற கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. துாண்கள் அமைப்பதற்கு வசதியாக, பல்வேறு இடங்களில் மண் பரிசோதனையின் போது சேகரிக்கப்பட்ட மண் மற்றும் கட்டட இடிபாடுகள், கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், மழை காலத்தில் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் மூழ்கும் நிலை உருவாகியுள்ளது. மண் மற்றும் கட்டட இடிபாடுகளை பருவ மழைக்கு முன் அகற்றுவதாக, ஒப்பந்த நிறுவனம் வாய்மொழியாக உறுதி அளித்துள்ளது. இதை ஏற்று, அங்கு கட்டட இடிபாடுகளை கொட்டுவதற்கு, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார். கட்டட இடிபாடுகளால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, நம் நாளிதழில் 14ம் தேதி செய்தி வெளியானது.இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்டுள்ளது. விழித்துக் கொண்ட அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், கூவத்தில் கட்டட இடிபாடுகள் மற்றும் மண்ணை கொட்டி நிரப்புவதற்கு, அரசிடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும். கொட்டிய மண் மற்றும் இடிபாடுகளை குறித்த நேரத்தில் அகற்ற முடியாவிட்டால், அப்பணியை மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு, 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று பெய்த மழையால், கூவத்தில் கொட்டிய மண் மற்றும் கட்டட இடிபாடுகள் கரைந்து, நீரில் வெளியேற துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N DHANDAPANI
மே 17, 2024 14:44

இந்த தவறு மிக தீவிரமானது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


குப்பைக்காரன்
மே 17, 2024 12:34

அது சரி... கழிவுகளை அகற்றி எங்கே கொட்டுவீங்க தத்திகளா? எடத்தைக் காட்டினா நாங்களே கொண்டு போய்க் கொட்டிருவோம்ல?


ஆரூர் ரங்
மே 17, 2024 12:29

மதுரவாயல் துறைமுக சாலைக்கு பழைய திட்டத்தை கைவிட்டு விட்டு வெறும் இருபது கிமி சாலைக்கு ஐயாயிரத்து எண்ணூறு கோடி புதிய டெண்டர். அதாவது ஒரு கிமி சாலைக்கு சுமார் 290 கோடி? அந்த இடிபாடுகளைக் கொட்ட கூவம்? மீண்டும் மணக்க வைக்க முத்துவேல் கருணாநிதி மகன் இருக்கிறார். மீண்டும் மீண்டும் முதலை வராமல் இருந்தால் சரி. ஓட்டுப் போட்ட புத்திசாலிகள் அனுபவிக்கலாம்.


Ramanujadasan
மே 17, 2024 11:50

வீராணம் ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், சக்கரை ஊழல், கூவம் ஊழல் , போன்றவைகள் திரும்ப வர போகின்றன ,


ram
மே 17, 2024 11:39

இதை இவர்களே கொட்ட விட்டு விட்டு இப்போது அதை எடுப்பதற்கு கோடிகள் ஓஹோ இதுதான் திராவிட ஆட்சி போல


duruvasar
மே 17, 2024 10:33

போட காசு , எடுக்க காசு, மறுபடியும் எடுத்ததை போட காசு எப்புபுபுடி இதுதான் டா திராவிட மாடல்


Rangarajan
மே 17, 2024 09:46

கூவம் மட்டுமல்ல அனைத்து நீர்நிலைகளிலும் குப்பைகளு கொட்டுவது தவிர்க்க வேண்டும்,


jayvee
மே 17, 2024 08:52

அவைகள் வேண்டுமென்றே கொட்டப்பட்டவை இப்படி நீர் பரப்பை கோரிக்குது நிலப்பரப்பை அதிகரித்து அதில் கோவில் மசூதி சர்ச் அல்லது விசிக கம்யூனிஸ்ட் திராவிட கொடிகளை நட்டு பிறகு அதை அபகரித்து பிறகு சாலை அமைத்து மின் இணைப்பு பெற்று விற்பதுதான் இவர்கள் வேலை அனகாபுத்தூரில் , மதுரவாயல் குன்றத்தூர் பகுதிகளில் ஆற்றோரம் ஆக்கிரமிப்பில் பல ஆலைகள் இயங்கி வருகின்றன கழிவுகளை நேரடியாக ஆற்றில் விடுகின்றன இது அரசுக்கும் தெரியும், அதிகாரிகளுக்கும் தெரியும் அரசியல் வாதிகளுக்கும் தெரியும்


VENKATASUBRAMANIAN
மே 17, 2024 08:09

சிங்கார சென்னை என்று கொள்ளை அடித்தாயிற்று இப்போது அடுத்த கொள்ளை ரெடி இதுதான் திராவிட மாடல் அரசு


Kasimani Baskaran
மே 17, 2024 05:11

ஏற்கனவே மராமத்துப்பணிகள் நேர்மையாக செய்யாமல் தூர்ந்து போகும் நிலையில் இருந்த கூவத்தில் மேலும் மண்ணைக்கொட்டி ஆற்றை மெத்தி சாதனை படைத்தது இருக்கிறார்கள் தடையில்லா சான்றிதழ் கொடுத்த அதிகாரியை பணிநீக்கம் செய்து அவரது சம்பளத்தை வைத்தும் ஒப்பந்தக்காரரின் சொத்துக்களை முடக்கியும் அதில் இருந்து வரும் பணத்தை வைத்து மண்ணை திரும்ப அள்ளலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை