உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயின் பறிப்பு சம்பவத்தில் மகன் தந்தை விஷம் குடித்து தற்கொலை

செயின் பறிப்பு சம்பவத்தில் மகன் தந்தை விஷம் குடித்து தற்கொலை

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் முத்தார்பட்டியில் மகன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் விரக்தியில் தந்தை பூமிநாதன் 40, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.முத்தார்பட்டியில் ஜூன் 15ல் சடையாண்டி கோயில் திருவிழா நடந்தது. அதற்கு திருச்சுழியில் இருந்து வந்த சோலையம்மாள் 24, அக்கா முத்துலட்சுமி 26, உடன் இரவு காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது அவர்களுக்கு பின்னால் டூவீலரில் வந்த 16 வயதுள்ள இரு சிறுவர்கள் சோலையம்மாள் அணிந்திருந்த வெள்ளி செயினை பறிக்க முயன்றனர். பெண்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இரு சிறுவர்களில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் என்பதும், மற்றொருவர் கோசுக்குண்டு தர்மர் மகன் என்பதும் தெரிந்தது. மனவிரக்தி அடைந்த பூமிநாதன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கினார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி