உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு ரயில் இரு மாதங்களுக்கு நீட்டிப்பு

சிறப்பு ரயில் இரு மாதங்களுக்கு நீட்டிப்பு

மதுரை : செகந்திராபாத் -- ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில்கள் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயில் (07695) மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26ல் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9:10 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மறுநாள் இரவு 11:45 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் -- செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28ல் ராமநாதபுரத்திலிருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:50மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ