உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயலில் வேகம், சொற்களில் கவனம்: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுரை

செயலில் வேகம், சொற்களில் கவனம்: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள் என இன்றிரவு அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். முதல்வர், அடுத்த மாதம் 14ம் தேதி சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளார்.

கவனம் தமிழகம் மீது தான்!

இந்நிலையில் கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: மக்களிடம் நற்சான்றிதழை பெற அமைச்சரவை கூட்டத்திலும், மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள். கடல் கடந்து சென்றாலும், கவனம் எல்லாம் தமிழகத்தின் மீது தான் இருக்கும்.

சிறகு விரிக்கிறேன்

விமர்சனம், விவாதம் செய்பவருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்கள் பதில்களாக அமையட்டும். ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். தமிழகம் சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.

கண்ணியம்

அயல்நாடு சென்றாலும், தமிழகத்தில் எந்த ஒரு பணியும் தடைபடாமல் நடைபெற வேண்டும்.பயணத்தின் நோக்கம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பது தான். அரசு நிர்வாகம் தொய்வின்றி தொடர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறேன். ஆட்சிப்பணி, கட்சிப் பணிகளை ஒருங்கிணைந்து கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 28, 2024 10:05

முகமது பின் துக்ளக் என்று சோ வின் திரைப்படம் ஒன்று உள்ளது. இன்றைய இளைய சமுதாயம் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம். பல இளைஞர்கள் புதிதாக கட்சி என்றும் அரசியலுக்கு வருகிறார்கள். ஆகவே அனைவரும் மீண்டும் ஒருமுறை அந்த திரைப்படம் பார்க்க வேண்டும்.


இராம தாசன்
ஆக 28, 2024 00:19

நாளை முதல் அமெரிக்கா சுற்றும் முதல்வர் - புத்தம் புது திரைப்படம் - புது பொலிவுடன் உங்கள் அபிமான RSB மீடியாவில் - காணத்தவறாதீர்கள்


Sridharan Venkatraman
ஆக 27, 2024 19:51

அவுரங்கசிப் ஏதாவது கூப் பண்ணி விடுவாரோ என்று ஷாஜஹானுக்கு பயமோ ?


V RAMASWAMY
ஆக 27, 2024 19:07

இந்த வயதில் சிறகு விரிப்பதா? நடப்பதே தடுமாற்றம்.


தமிழன்
ஆக 27, 2024 18:54

இளைஞர்களுக்கு வழிவிடவில்லை என்று திட்டமிட்டு முதல்வரை அமெரிக்க அழைத்து செல்கிறார்கள் என்று யாராவது கேட்க போறாங்க.. அவர் போவது மக்கள் நலனுக்காக .. .. "தன் மக்கள்" நலனுக்காக


theruvasagan
ஆக 27, 2024 17:15

இன்னும் இருக்கறது 20 மாதங்கள்தான். பேச்சை குறைத்து நம்ம வேலைகள் படு ஸ்பீடா நடக்கணும். என்ன. நான் சொன்னது புரிஞ்சுதா.


தமிழன்
ஆக 27, 2024 15:38

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாநிலத்தில் இல்லாத போது மக்கள் பயன்படுத்தும் அதி முக்கியமான சாலையில் கார் பந்தயம் அவசியமா? அதனால் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது முதல்வர் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என யாரும் கோரிக்கை வைத்து இருக்காங்களா


ஆரூர் ரங்
ஆக 27, 2024 15:25

யாருக்கு அறிவுரை?ஜாஃபர் கும்பலுக்கா?


Mr Krish Tamilnadu
ஆக 27, 2024 15:22

குரங்கு அம்மை, உங்க டீம் அனைவரும் முன்னெச்சரிக்கை உடனும், கவனமாகவும் பிறர் உடன் கலந்துரையாடவும். தொழில் வளர்ச்சியை விட, குரங்கு அம்மை தொற்று மிக டேஞ்சர்.


ஆரூர் ரங்
ஆக 27, 2024 16:30

ஒரு சந்தேகம். குரங்கம்மை வருமா? முடி முளைக்குமா?


Mani . V
ஆக 27, 2024 14:28

கொள்ளையில் வேகம், சொற்களில் கவனம். ஆதாரம் இல்லாமல் செய்யோணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை