உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 'தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் தி.மு.க., அரசு முனைப்பாக இருக்கிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச் 16, 2024 முதல் ஜூன் 6, 2024 வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் போலீசாருக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2qm982mr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே, அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசு, போலீசாருக்கு வழங்க வேண்டிய பயணப்படியை வழங்கத் தாமதிப்பது, அவர்களிடையே பணியாற்றும் ஆர்வத்தைக் குறைத்து விடும். உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட போலீசார்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.Varadarajan
ஜூன் 30, 2024 18:40

நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் எதிரி நாடுகளான பக்கிஸதான் மற்றும் நாடு விழுங்கி சீனாவிற்கு ஆதரவாக பேசும் கோணங்கி கட்சி மாயவரம் போண்டா மணி போன்ன்றவர்களின் தேச துரோகத்திற்கு பரிசாக அவர்களுடைய குடி உரிமை பற்றிக்கப்படவேண்டும், தேவையானால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும்.


venugopal s
ஜூன் 29, 2024 19:45

இன்று தமிழக அரசை குறை சொல்லிப் பேசுவதற்கு உருப்படியான விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை போலும்!


VSMani
ஜூன் 29, 2024 18:10

பிஜேபி யும் தான் கோடிக்கணக்கில் மக்கள் வரி பணத்தை விளம்பரம்களுக்கு செலவிடுகிறது இதெல்லாம் நவீன அரசியலில் சகஜம். காமராஜர் மட்டுமே மக்கள் பணத்தில் விளம்பரம் செய்யாமல் பள்ளிக்கூடம் கட்டினார்.


Palanisamy Sekar
ஜூன் 29, 2024 16:13

அதெல்லாம் கொடுத்தாகிச்சுன்னு தஸ்தாவேஜ்கள் சொல்லும். உரியவர்களுக்கு போய் சேர்ந்திருக்காது. இது பாரம்பரிய முறையாக செய்கின்ற இன்னோர் ஊழல். சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழலைபோன்றது இது. அண்ணாமலைகிட்டயே போயி கேட்டுக்கோன்னு சாக்குபோக்கு சொல்வார்கள்


கனோஜ் ஆங்ரே
ஜூன் 29, 2024 15:35

வேலைய மட்டும் பாருங்க? மாநிலத்தில தலையிடாதீங்க... மத்திய போலீசுக்கு கொடுக்க வேண்டிய சலுகையை ஒழுங்கா கொடுக்கச் சொல்லுங்க..?


Mettai* Tamil
ஜூன் 29, 2024 16:16

அவர் வேலையை பார்க்கிறனாலே தான் சில ஊழல்வாதிகள் பிடிபட்டனர் ......


Nkk Baburaj
ஜூன் 29, 2024 17:24

யாருப்பா அது?


hari
ஜூன் 29, 2024 19:24

கனோஜ் டாஸ்மாக்யில் கிக் இல்லயாம்.... துறைமுருகன் சொல்லிட்டாரு....


vetri
ஜூன் 29, 2024 15:19

எதற்கு பயணப்படி? தெருவோர கடைகளில் தினமும் கலெக்ஷன் மற்றும் மாதத்திற்கு ஒரு முறை வாடகை போல் ஒரு தொகை எதற்கு பயணப்படி...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ