உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசி கயாவுக்கு ஆன்மிக சிறப்பு ரயில்

காசி கயாவுக்கு ஆன்மிக சிறப்பு ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆடி அமாவாசையையொட்டி, காசி, கயாவுக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இந்தியாவின் உயர்ந்த கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டு களிக்கும் வகையில், ஆன்மிக இடங்களுக்கு, தனியார் பங்களிப்போடு, யாத்திரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஆடி அமாவாசையொட்டி, தமிழகத்தில் இருந்து புரி ஜெகநாதர், காசி கங்கை நதியில் புனித நீராடல், விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம், கயாவில் ஆடி அமாவாசை அன்று பிண்ட தர்ப்பணம், அயோத்தியில் குழந்தை ராமர் தரிசனம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிருத்திகா தேவி, பீமலா தேவி, பிரஜா தேவி, காசி விசாலாட்சி, அலோபி தேவி சக்தி பீடங்களை தரிசிக்கலாம். மதுரையில் இருந்து ஜூலை 31ல் புறப்படும் இந்த ஆன்மிக சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக இயக்கப்படும்.மொத்தம் 10 நாட்கள் சுற்றுலாவுக்கு, சிலீப்பர் பெட்டியில் ஒருவருக்கு 19,500 ரூபாய், 'ஏசி' பெட்டியில் 32,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை பெற, 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:52

காசி க்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம்- ஆளூர் ஷா நவாஷ் ....... மெக்கா & வாடிகன் டமிழனுக்கு,ரொம்ப ஆழ்ந்த சம்பந்தமாக்கும்...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை