ஜெயலலிதா போல் மீண்டும் முதல்வர் ஆவார் ஸ்டாலின்
லால்குடியில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து நான் பேசியது, தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானார். அதேபோன்றதொரு சூழல், 2026 சட்டசபை தேர்தலிலும் ஏற்படும். ஏற்கனவே அ.தி.மு.க., வெற்றி பெற்றது போல, தி.மு.க., 2026ல் வெற்றி பெறும். தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார். அப்படிபட்ட கருத்தோடுதான், கூட்டணி குறித்து பேசினேன். மற்றபடி, இப்போது தி.மு.க., தலைமையில் இருக்கும் கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். தற்போதைய தி.மு.க., கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை. கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கு மற்றொருவர் இணக்கமாகவும் அன்பாகவும் உள்ளனர். கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்