வங்கக் கடலில் புயல் : பாம்பனில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=il5guq0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா, ஆந்திரா கடலோரத்தில் இருந்து வட மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சின்னம் ஒடிசா பாரதீப், கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கிலும், ஆந்திரா கலிங்கப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கு, வட கிழக்கிலும் மையம் கொண்டு உள்ளது. இதனால் தமிழக கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசி ராட்சத அலைகள் எழக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தொலைதுார புயல் சின்னத்தால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.இச்சூழலில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதித்த நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் ஜூலை 16 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.