உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்

திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை இருந்தது. அதை சில ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகம் நகர்த்தி வைத்தது. இதை கண்டித்தும், மீண்டும் பழைய இடத்தில் ஆஞ்சநேயர் சிலையை வைக்க வலியுறுத்தியும், திருமால் அடியார் குளம் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அந்த அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலையை பழைய இடத்தில் வைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்று, 2 மணிநேரம் பக்திபாடல்கள் பாடியும், ஜால்ரா அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோவில் நிர்வாகத்தினரும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். பின் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து விட்டு, கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், ஸ்ரீரங்கம் கோவில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை