உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச வழக்கில் கைதான சர்வேயர் பணி நீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான சர்வேயர் பணி நீக்கம்

விழுப்புரம்: பட்டா மாற்ற லஞ்சம் வாங்கி கைதான கைதான தற்காலிக சர்வேயர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.கண்டாச்சிபுரம் அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,45; கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக சர்வேயராக பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 28ம் தேதி விவசாயி சுரேஷ் என்பவரின் நிலத்தை அளந்து பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.அதனையொட்டி, தற்காலிக சர்வேயர் ராமமூர்த்தியை, பணி நீக்கம் செய்து, விழுப்புரம் நில அளவைத் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ