உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர் நேற்று தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

theruvasagan
ஜூன் 19, 2024 22:27

மத்திய அரசுக்கு கடிதம் எழுதறதெல்லாம்.தேவையில்லாதது. சீமான் கிட்ட சொன்னா ஆமையோட்டு படகுல சிலோனுக்கு போய் சிறையை உடைச்சு மீனவர்களளை மீட்டுக் கொண்டு வந்துருவாப்ல.


vadivelu
ஜூன் 20, 2024 06:41

நம்ம இ நாடுகளில் இருந்து நம்ம மக்களை மீட்டு வருவது போல நாமே ஏன் மீனவர்களை மீட்டு வர கூடாது .


Ramesh Sargam
ஜூன் 19, 2024 20:33

பிறகு நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவித்தவுடன் எங்களுக்கு சொல்லவும். ஏன் என்றால் ஸ்டிக்கர் ரெடிபண்ணி ஒட்டவேண்டும்.


பேசும் தமிழன்
ஜூன் 19, 2024 19:30

கடிதம் எழுதி என்ன ஆகப் போகிறது.... இதையே தானே ஜெ அவர்கள் முதல்வராக இருந்த போதும் செய்தார்..... நீங்கள் அப்போது அதை குறை சொன்னவர்கள் தானே நீங்கள்???


Sridharan Venkatraman
ஜூன் 19, 2024 19:10

உக்ரைன் ல் இருந்து மாணவச் செல்வங்களை காப்பாற்றி அழைத்து வந்த தங்க தலைவா .... மீனவர்களை உன்னால் காக்க முடியாதா ... எதுக்கு லெட்டர் ?


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2024 19:09

மீன் பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு போதைப்பொருள்கள் கடத்தினால், சிறையில் தான் இருக்க வேண்டும்.


Krishnakum
ஜூன் 19, 2024 18:16

இதே மாதிரி எடப்பாடி பிரதமருக்கு கடிதம் எழுதியபோது நக்கல் நயாண்டி செய்தவர் தான் நம்ம இப்போதைய முதல்வர் ???


Pv, முத்தூர்
ஜூன் 19, 2024 17:42

40ல் வெற்றி - ஆனால் 4 போரை கூட மீட்கமுடியவில்லை. கடிதம் எழுதியோ காலத்தை போக்கவேண்டியதுதான்.


தமிழ்வேள்
ஜூன் 19, 2024 17:25

கள்ளசாராயத்தை ஒழிக்கும் வழியை பாருங்க


Svs Yaadum oore
ஜூன் 19, 2024 17:21

மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 தொழிலாளர் குடும்பங்கள் நிர்க்கதியான நிலைமை ....சென்னை பரந்தூர் எகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களாக போராட்டம் ....ஏகனாபுரம் கிராம மக்கள் சித்தூர் ஆந்திராவுக்கு குடி போவதாக அறிவிப்பு ... மாஞ்சோலை எஸ்டேட் மற்றும் எகனாபுரம் கிராமம் ஆப்பிரிக்காவிலா இருக்குது ??....அதை கவனிக்க நேரமில்லை ....இவரு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரருக்கு கடிதம் எழுதறாராம் ...


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 17:09

இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன் திருடர்களுக்கு எவ்வித மன்னிப்பையும் அளிக்கக் கூடாது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் சட்டப்படி பறிமுதல் செய்யலாம். இலங்கையிலேயே ஏலம் விடலாம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ