உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய உச்சம் தொட்டது தமிழக மின் நுகர்வு

புதிய உச்சம் தொட்டது தமிழக மின் நுகர்வு

சென்னை:தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளிலும், ஒருநாள் முழுதும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. இது, தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. கோடை வெயிலால் வீடுகளில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.இதனால் தினசரி மின் நுகர்வு, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது. இந்தாண்டு மார்ச் 29ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், 42.64 கோடி யூனிட்களாக அதிகரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட காரணங்களால், வீடுகளில் மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.இதையடுத்து, நேற்று முன்தினம் மின் நுகர்வு, 43.01 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி