உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரியில், கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைப்பதற்கான கடல்சார் பாதசாரிகள் பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு செய்திக்குறிப்பு:தமிழகத்தில் சாலை வசதிகளை பெருக்குவதில், முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் 4,984 கோடி ரூபாய் மதிப்பில், 577 கி.மீ., நீள சாலைகளை, நான்குவழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதுவரை, 2,608 கோடி ரூபாய் செலவில், 215 கி.மீ., நீள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன; மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், 2,465 கோடி ரூபாயில், 1,710 கி.மீ., சாலைகளை, இருவழிச் சாலைகளாக மாற்றும் பணி எடுக்கப்பட்டது. இதுவரை, 1,860 கோடி ரூபாயில், 1,407 கி.மீ., சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுக்கப்பட்டு, 18 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 21 பணிகள் நடந்து வருகின்றன. 27 பணிகள் நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.குமரி முனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம், 37 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

P.M.E.Raj
ஜூன் 09, 2024 11:55

இது அப்பட்டமான பொய். தமிழக அரசு ஒரு பைசா கூட செலவு செய்வது கிடையாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் பணம் . திமுகவிற்கு வெட்கமே கிடையாது . அனைத்திலும் ஸ்டிக்கர் ஓட்டுவதே வேலையா போச்சு .


Rajasekar Jayaraman
ஜூன் 09, 2024 10:01

இந்தியா முழுக்க கட்டும் மேம்பாலங்கள் ரோடுகள் அனைத்தும் தமிழக அரசின் திட்டங்களே என்று சொல்லி விடலாமே.


Rajasekar Jayaraman
ஜூன் 09, 2024 09:59

மத்திய அரசு திட்டம் எல்லாம் மாநில ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது கொள்ளை.


Kundalakesi
ஜூன் 09, 2024 07:08

மழை பெய்து கிட்ட தட்ட அணைத்து மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊரில் உள்ள முக்கிய சாலைகள் சொத்தை பல் போல குழியுடன் உள்ளன. இதை முதலில் சீர்செய்ய வேண்டும்.


sankaranarayanan
ஜூன் 09, 2024 06:34

இதில் சேலம் சென்னை எட்டுவழி சாலையும் உண்டா


மேலும் செய்திகள்









புதிய வீடியோ