உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் நாளை கொடைக்கானல் வருகை டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

முதல்வர் நாளை கொடைக்கானல் வருகை டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

கொடைக்கானல்: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க நாளை கொடைக்கானல் வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், நாளை முதல் மே 4 வரை கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் சாலைமார்க்கமாக மதியம் கொடைக்கானல் வந்தடைகிறார்.

ஆலோசனை

இதையடுத்து டி.ஐ.ஜி., தலைமையில் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் , முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பாம்பார்புரம் தனியார் விடுதியில் நேற்று நடந்தது. முதல்வர் தங்குமிடம், பாதுகாப்பு, விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதல்வர் செல்லும் ரோடுகளில் மூன்றடுக்கு பாதுகாப்பில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ