உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மை வைக்கும் வேலை: பேராசிரியர்கள் புலம்பல்

மை வைக்கும் வேலை: பேராசிரியர்கள் புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: ஓட்டுப்பதிவுக்கான 'மை' வைக்கும் பணிக்கு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஓட்டுச்சாவடியில் பணி செய்ய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு, அனைத்து பகுதிகளிலும் நேற்று நடந்தது.உடுமலையில் இரு இடங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், துவக்கம் முதல், மேல்நிலை வரை உள்ள ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கான தேர்தல் பணிக்கான நியமன உத்தரவும் வழங்கப்பட்டது.இதில், பல முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர் இரண்டு, மூன்று நிலை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி, ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு, மை வைத்தல் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆன் செய்வது உள்ளிட்ட பணிகளை பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இதனால், பேராசிரியர்களும், முதுநிலை ஆசிரியர்களும் அதிருப்தியடைந்தனர். பணிகளை மாற்றி வழங்கவும், தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raja vivekanandan
மார் 25, 2024 15:36

யாராக இருந்தாலும் இந்த வேலையை செய்தால் தானே ஓட்டு போட முடியும் சம்பளம் வாங்கறீங்க ஒரு நாள் இதை செய்ய என்ன கேவலம் பாக்குறீங்க


தமிழ் நாட்டு அறிவாளி
மார் 25, 2024 11:17

கல்லூரி பேராசிரியர்களை இது போன்ற வேலைகளில் ஈடு படுத்துவதால் கல்வி தரம் குறைகிறது இதை பேராசிரியர்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு வகுப்புகளும் சரிவர எடுப்பதில்லை குறைந்த சம்பளத்தில் தனியார் கல்லூரிகளில் வேலைபார்க்கும் பேராசிரியர்களை விட இவர் பார்க்கும் வேலை குறைவு வெளிநாடுகளை போல் வருட கான்ட்ராக் கொண்டு வந்தால் இவர்கள் யாரும் இந்த அரசு வேலையை குறை கூற மாட்டர்கள்


ஆரூர் ரங்
மார் 25, 2024 11:10

PhD டாக்டர் பட்டம் பெற்ற அமைச்சர்☺️ எட்டாவது படித்த(பிளஸ் ஓசிகவுரவம் டாக்டர் பட்டம் ). முதல்வரின் கீழ் இருக்க வில்லையா?.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ