மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
சென்னை: 'கும்பகோணத்தில், கால்வாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, 12 வாரங்களில் அகற்றவில்லை என்றால், தஞ்சை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணத்தில் உள்ள 11 வாய்க்கால்கள், 44 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, 2018 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, 'நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை' என அவமதிப்பு வழக்கை, யானை ராஜேந்திரன் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், அப்துல் குத்துாஸ் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'அனைத்து ஆக்கிரமிப்புகளும், 12 வாரங்களுக்குள் அகற்றப்படுவதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். தவறினால், அக்., 28ல், தஞ்சை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்' என்று கூறியுள்ளது.அரசு சிறப்பு பிளீடருக்கு, கலெக்டர் அனுப்பிய கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாற்று இடம் ஒதுக்கிய பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும் என்பது, கலெக்டராக இருக்க அவருக்கு தகுதியில்லை என்பதையே காட்டுகிறது என்றும் கூறினர். விசாரணையை, அக்., 28க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
15 hour(s) ago