உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புதிய திராவிட கழகம் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் ராஜா 28; புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஆக.17 இரவு தனது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இது குறித்த போட்டோ வைரலானது. இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ராஜாவை கைது செய்தார்.இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
ஆக 24, 2024 11:01

இவனை கைது செய்ய இருந்த தைரியம் சில வருடங்களுக்கு முன் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய விஜயசேதுபதியை கைதுசெய்ய வரவில்லை . சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் நடிகர் பணக்காரர்களுக்கு தனிசட்டமா


VASANTHA RANI
ஆக 24, 2024 10:56

இப்படி ஒரு கட்சி இருக்கா தம்பி வாழை இலை நறுக்க கூட கத்தி எடுக்கக்கூடாது காவல்துறை பிறந்தநாள் கிப்ட் மறக்கமுடியாத இருக்கனும்


முக்கிய வீடியோ